முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சி எடையார்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் பட்டமளிப்பு விழாவாக நடைபெற்ற ஆண்டு விழா!

காஞ்சி எடையார்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் பட்டமளிப்பு விழாவாக நடைபெற்ற ஆண்டு விழா!

X
பட்டமளிப்பு

பட்டமளிப்பு விழாவாக நடைபெற்ற ஆண்டு விழா

Kanchipuram News : காஞ்சிபுரம் மாவட்டம் எடையார் பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டுவிழாவானது பட்டமளிப்பு விழாவாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எடையார்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் எடையார் பாக்கம், கோட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த சுமார் 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளியின் 112ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியை ஜெயந்தி தலைமை தாங்கினார். இந்த விழாவிற்கு ஒன்றிய குழு உறுப்பினர் நிஷாந்த் மூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பரிமேலழகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எடையார் பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத் குமார், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எடையார் பாக்கம் மூர்த்தி பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகள் வழங்கினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், 5ம் வகுப்பு மாணவ மாணவியர் இந்த கல்வி ஆண்டோடு விடை பெறுவதையொட்டி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வது போல கலந்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த மாணவ மாணவியருக்கு சிறப்பு விருந்தினர்கள் பட்டங்களை வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்வில் மாணவ மாணவியரின் பெற்றோர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Kanchipuram, Local News