முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் குப்பை சேகரிக்க நவீன பேட்டரி வாகனங்கள்.. இத்தனை வசதிகளா?

காஞ்சிபுரத்தில் குப்பை சேகரிக்க நவீன பேட்டரி வாகனங்கள்.. இத்தனை வசதிகளா?

X
பேட்டரி

பேட்டரி குப்பை வாகனம்

Kanchipuram news | காஞ்சிபுரம் ஒன்றியத்தில் ரூ. 1.49 கோடி மதிப்பீட்டில் குப்பைகள் சேகரிக்க பேட்டரியில் இயங்கும் புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 40 ஊராட்சிகளில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் தூய்மை பணியாளர்கள் மூலம், வீடுகள் தோறும் குப்பைகளை மூன்று சக்கர சைக்கிள்களில் நாள்தோறும் சேகரித்து அதனை மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்தெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சில நேரங்களில் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் அதிகளவில் சேர்ந்து, மூன்று சக்கர சைக்கிள்களில் தூய்மை காவலர்கள் எடுத்து செல்ல முடியாத சூழல் நிலவுகின்றது. இது போன்ற சூழலில் பல்வேறு சிரமங்களை மேற்கொண்டு வந்தனர்.

இதனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் பேட்டரியில் இயங்கக்கூடிய மூன்று சக்கர வாகனத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. அதன்படி, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 40 ஊராட்சிகளில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் ரூபாய் 1.49 கோடி மதிப்பீட்டில் மூன்று சக்கர பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு 40 ஊராட்சிகளுக்கு 51 மூன்று சக்கர பேட்டரி வாகனத்தை அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் முன்னிலையில் தூய்மை பணியாளர்களிடம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள், அலுவலர்கள் என 100 க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை, அசைவ உணவுகளை பரிமாறினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Cleaning equipment, Kanchipuram, Local News