முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற துரியோதனன் வதம்...

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற துரியோதனன் வதம்...

X
துரியோதனன்

துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

Kanchipuram festival | காஞ்சியில் வெகு விமரிசையாக நடைபெற்ற துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களின் வேண்டுதல் மற்றும் காணிக்கையை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram | Kancheepuram (Kanchipuram)

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் அங்காள பரமேஸ்வரி மற்றும் திரௌபதி அம்மன் கோயிலில் மகாபாரத விழாவையொட்டி வெகு விமரிசையாக நடைபெற்ற துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களின் வேண்டுதல் மற்றும் காணிக்கையை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி, திரௌபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மகாபாரத விழா நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு மகாபாரத பெருவிழா கடந்த மாதம் 23 ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு சொற்பொழிவு நிகழ்ச்சிகள்,நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிலையில் மகாபாரத பெரு விழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. அதையொட்டி பிரம்மாண்டமாக துரியோதனன் சிலை வடிவமைக்கப்பட்டு கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன் - துரியோதனன் போரிடும் போர்க்களக் காட்சி தத்ரூபமாக நடத்தப்பட்டது.இதில் பீமன் வேடமணிந்து ஒருவர் துரியோதனன் சிலையின் தொடைப்பகுதியில் கதாயுதத்தால் ஓங்கி அடித்ததில் அந்த இடத்தில் இருந்து சிவப்பு நிற திரவம் வடிந்ததை அடுத்து அதை திரௌபதி வேடமணிந்தவர் கூந்தலில் பூசிய பின் துரியோதனன் சிலையை மூன்று முறை வலம் வந்த சபதம் முடிந்ததையடுத்து அம்மனுக்கு மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.

மேலும் இந்த துரியோதனன் படுகள காட்சியை தீமிதி விழாவிற்காக காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருக்கும் பக்தர்களும், அதே பிள்ளையார்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் வேண்டுதல் காணிக்கையை செலுத்தி தரிசனம் செய்து, அங்காள பரமேஸ்வரி, திரெளபதி அம்மனை வழிபட்டுச் சென்றனர். மேலும் மாலை தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Kanchipuram, Local News