ஹோம் /காஞ்சிபுரம் /

பொங்கல் பண்டிகைக்காக காஞ்சிபுரத்தில் தயாராகி வரும் போகி மேளங்கள்

பொங்கல் பண்டிகைக்காக காஞ்சிபுரத்தில் தயாராகி வரும் போகி மேளங்கள்

X
போகி

போகி மேளம் செய்யும் தொழிலாளி

Kanchipuram Bhogi Melam Production | வெங்கடேசபாளையம், திருக்காலிமேடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காலம் காலமாக போகி மேளங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு, விற்பனை செய்து தங்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

பொங்கல் பண்டிகையையொட்டி காஞ்சிபுரத்தில் போகி மேளங்கள் தயாரிக்கும் பணிகள் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது.தைப்பொங்கல் கொண்டாடுவதற்கு முன்னாள் வருகின்ற மார்கழி மாத கடைசி நாளை போகிப் பண்டிகை என கொண்டாடு மகிழ்வது தமிழர்களின் வழக்கம்.  பழையன கழிதலும் புதியன புகுதலும் என கொண்டாடும் போகிப் பண்டிகை நாளில் மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து பயனற்ற நிலையில் வைத்துள்ள பொருட்களை போகி பண்டிகை நாளில் தீயிட்டுக் கொளுத்துவதே நடைமுறையாகும்.

போகிப் பண்டிகை நாளில் பெரியவர்கள் பழைய பொருட்களை வீடுகள் முன் வாசலில் போட்டு கொளுத்தி வரும் போது சிறுவர்களும் சிறுமிகளும் போகி மேளத்தைக் கொட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் தமிழர்களின் பாரம்பரியத்தில் ஒன்றிப்போன போகி மேளங்கள் மண்ணால் செய்யப்பட்ட ஓடுகளில், சுண்ணாம்பினால் சுத்தம் செய்யப்பட்ட மாடுகளின் ஜவ்வினை ஓட்டி போகி மேளங்கள் தயார் செய்யப்படுகிறது.

காஞ்சிபுரத்தில் வெங்கடேச பாளையம், திருக்காலிமேடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காலம் காலமாக போகி மேளங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு, விற்பனை செய்து தங்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை வரும் போகிப் பண்டிகையை ஒட்டி காஞ்சிபுரத்தில் தயாரிக்கும் போகி மேளங்கள் காஞ்சிபுரம் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளுக்கும், சென்னை, திருவள்ளூர் செங்கல்பட்டு,வேலூர்,விழுப்புரம்,திருவண்ணாமலை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தற்பொழுது மாறிவரும் காலத்திற்கு தக்கவாறு பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட போகி மேளங்கள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் போகிமேளம் விற்பனை குறைந்து, மேளம் செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் பழமையை மறக்காமல் போகி மேளத்தை தயாரித்து விற்பனைக்காக தொழிலாளர்கள் வைத்துள்ளனர். மேலும் பொதுமக்களும் போகிப் பண்டிகைக்கு மறக்காமல் பாரம்பரிய முறையை மாற்றாமல் பிளாஸ்டிக் போகி மேளத்தை தவிர்த்து,சிறுவர் சிறுமிகளுக்கு போகி மேளத்தை வாங்கி கொடுத்து போகி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும், தொழிலாளர்களாகிய தங்களின் வாழ்வாதாரத்தையும் காத்திடவும் வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

First published:

Tags: Bhogi, Kanchipuram, Local News