முகப்பு /காஞ்சிபுரம் /

"அம்மா எங்கே" தவித்த நாய்க்குட்டிகளை தாயுடன் சேர்த்து வைத்த தீயணைப்புத்துறையினர்!

"அம்மா எங்கே" தவித்த நாய்க்குட்டிகளை தாயுடன் சேர்த்து வைத்த தீயணைப்புத்துறையினர்!

X
நாய்

நாய் குட்டிகளை தாயுடன் சேர்த்து வைத்த தீயணைப்புத்துறையினர்

Dog puppys | காஞ்சிபுரத்தில் தாயை பிரிந்து தவித்து வந்த பிஞ்சு நாய் குட்டிகளை தெருவாசிகளும், தீயணைப்புத்துறையினரும் சேர்ந்து கால்வாயில் சிக்கிய நாயை மீட்டு குட்டிகளுடன் சேர்த்து வைத்தனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram | Kancheepuram (Kanchipuram)

"அம்மா அம்மா நீ எங்க அம்மா போன" என்று தன்னை ஈன்ற தாய் காணாமல் போய் தவித்து வந்த நாய்க்குட்டிகளிடம் தாயை மீட்டு சேர்த்த பல்லவர்மேடு மேற்கு தெருவாசிகள் மற்றும் தீயணைப்புததுறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லவர்மேடு மேற்கு தெருவில் கடந்த ஐந்து வருடங்களாக தெருவாசிகளின் செல்லப்பிராணியாக இருந்து வருகிறது "வெள்ளச்சி" எனும் பெண் நாய். இந்த தெருவாசிகள் இதனை தங்களது வீட்டு நாயாக கருதி தினந்தோறும் தங்கள் வீட்டு பிள்ளை போல மூன்று வேளையும் உணவளித்தும் இதனை தங்கள் செல்லக்குட்டியாக பராமரித்து வந்துள்ளனர்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு செல்லப் பிராணியான "வெள்ளச்சி" கர்ப்பமாக இருந்து வந்த நிலையில் நான்கு குட்டிகளை ஈன்றது.இதில் இரண்டு குட்டிகள் பெண்ணாகவும் இரண்டு குட்டிகள் ஆணாகவும் பிறந்துள்ளது. இந்நிலையில் திடீரென தாய்நாய் காணாமல் போக நான்கு குட்டிகளும் தாய் இல்லாமல் புட்டிபாலும் குடிக்க மறுத்தன. இதை கண்டும் மிகவும் வேதனை உற்ற பொதுமக்கள் தாய் நாயை பல இடங்களில் தேடினர். இதையடுத்து மஞ்சள் நீர் கால்வாயில் கை கால்களை நகர்த்த முடியாத அளவிற்கு பரிதாபமாக விழுந்து கிடந்த நிலையில் காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் வந்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான மீட்பு குழுவினர் கால்வாயில் பரிதாபமாக விழுந்து கிடந்த நாயை பத்திரமாக மீட்டனர். பின்பு மீட்கப்பட்ட நாய் தான் வெள்ளச்சி என்பது அந்த தெருவாசிகளுக்கு தெரிந்தது இதையடுத்து நாயை அழைத்து வந்து குட்டிகளுடன் சேர்த்தனர்.

தாய் நாயை கண்டதும் உணவில்லாமல் சோர்வடைந்து கண் கூட திறக்க முடியாத அளவிற்கு படுத்து கிடந்த நாய்குட்டிகள் உடனடியாக தாய் நாயிடம் வந்து தங்களது அன்பை வெளிப்படுத்தின. இதனைக் கண்டதும் அப்பகுதி மக்கள் தங்கள் கண்களில் கண்ணீர் தேங்கியபடி நெகிழ்ச்சியுடன் பார்த்தபடி நின்றனர்.

First published:

Tags: Dog stuck, Kanchipuram, Local News