முகப்பு /செய்தி /காஞ்சிபுரம் / நள்ளிரவில் 10 ஜோடிகளுக்கு ஜோராக நடந்த சமத்துவ திருமணம்... ஒரு ஜோடிக்கு ரூ.80 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசை!

நள்ளிரவில் 10 ஜோடிகளுக்கு ஜோராக நடந்த சமத்துவ திருமணம்... ஒரு ஜோடிக்கு ரூ.80 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசை!

10 ஜோடிகளுக்கு திருமணம்

10 ஜோடிகளுக்கு திருமணம்

Kanchipuram | காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 70 கிலோ கேக் வெட்டப்பட்டது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரத்தில் தலா ரூ.80 ஆயிரம் மதிப்பிலான சீர் வரிசைகளுடன் 10 ஜோடிகளுக்கு, வழக்கத்திற்கு மாறாக இரவில் சமத்துவ திருமணம் செய்து வைக்கப்பட்டது.

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக ஆதி திராவிட நலக்குழு அணி சார்பில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் ஓரிக்கை பகுதியில் நடைபெற்றது.

ஆதி திராவிட நலக்குழு மாவட்ட அமைப்பாளர் செவிலிமேடு மோகன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற விழாவில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏவுமான க.சுந்தர், காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ, சிவிஎம்பி. எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 10 ஜோடிகளுக்கு இரண்டு கிராம் தாலி வழங்கப்பட்டு சமத்துவ திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. நள்ளிரவில் நடைபெற்ற இந்த திருமணத்தில், சட்ட மன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன் மற்றும் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் நிர்வாகிகள் 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்.

மேலும் கட்டில், பீரோ, மெத்தை என ரூ.80 ஆயிரம் மதிப்பிலான சீர் வரிசை ஒவ்வொரு ஜோடிகளுக்கும் வழங்கப்பட்டது. 2000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பிரியாணி விருந்தும் வழங்கப்பட்டது.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் மாநகராட்சி திமுக செயலாளர், சி.கே.வி. தமிழ்ச்செல்வன் மற்றும் பெரும் திரளான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

top videos

    செய்தியாளர்: சந்திரசேகர், காஞ்சிபுரம்.

    First published:

    Tags: CM MK Stalin, DMK, Kanchipuram, Local News, Marriage