முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தவன உற்சவம் - நந்தவன மண்டபத்தில் அருள்புரிந்த வரதர்...

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தவன உற்சவம் - நந்தவன மண்டபத்தில் அருள்புரிந்த வரதர்...

X
பெருந்தேவி

பெருந்தேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் 

Varadaraja Perumal Temple |காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற தவன உற்சவத்தில் நந்தவன மண்டபத்தில் எழுந்தருளிய வரதரை திரளான பக்தர்கள் வணங்கி வழிபட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தவன உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தவன உற்சவம் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

முதல் நாளான நேற்று வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, பச்சைப்பட்டு உடுத்தி வைர, வைடூரிய ஆபரணங்கள் அணிவித்து செண்பகப்பூ கதம்ப பூ மலர் மாலைகள் சூட்டி கோவில் வளாகத்தில் உள்ள நந்தவன மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தவனக்கொத்து சரங்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தவன மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளித்த வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்ததை தொடர்ந்து தவன உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர் மேளதாளங்கள் முழங்க, வேத பாராயண கோஷ்டினர் வேதங்கள் பாடிவர கோவில் வளாகத்தில் உலா வந்த வரதராஜ பெருமாள் பெருந்தேவி தாயருக்கு கட ஆரத்தி காண்பிக்க பட்டதை தொடர்ந்து கோவிலுக்குள் திரும்பினார்கள். முதல் நாள் தவன உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

First published:

Tags: Kancheepuram, Local News