முகப்பு /காஞ்சிபுரம் /

ப்ளஸ் டூ பொதுத்தேர்வு.. காஞ்சிபுரத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம்...

ப்ளஸ் டூ பொதுத்தேர்வு.. காஞ்சிபுரத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம்...

X
பொது

பொது தேர்வுகள் ஆலோசனைக் கூட்டம்

Kanchipuram District | காஞ்சிபுரத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வரும் 13ஆம் தேதி தொடங்க உள்ள அரசு பொது தேர்வு நடத்துவதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வரும் 13ஆம் தேதி தொடங்க உள்ள 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 10,11 வகுப்பு அரசு பொது தேர்வுகளை நடத்துவதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அரசு பாடநூல் கழக உறுப்பினர் செயலரும் காஞ்சிபுரம் மாவட்ட பொதுத்தேர்வுகள் கண்காணிப்பு அலுவலருமாகிய முனைவர்.மு.கண்ணப்பன் தலைமையில் காஞ்சிபுரம் ஆந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் வரும் 13.03.2023 அன்று தொடங்க இருக்கும் +2 தேர்வு மற்றும் +1 மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் நடத்துவதற்கான தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் மைய கட்டுக்காப்பாளர்கள் மற்றும் வழித்தட அலுவலர்கள் அனைவருக்கும் வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தேர்வுகளை எவ்வித புகார்களுக்கும் இடமின்றி சிறப்பான முறையில் நடத்திடவும், மாணவர்கள் மகிழ்ச்சியான முறையில் தேர்வு எழுத தேவையான, பாதுகாப்பான தேர்வு அறைகள், தளவாடப் பொருட்கள் மற்றும் கழிப்பிடங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தர தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், தேர்வு வினாத்தாள்கள் பாதுகாப்பான முறையில் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல முறையான அனைத்து தேர்வு விதிகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) வள்ளிநாயகம், காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) கு.ஜெய்சங்கர், காஞ்சிபுரம் மாவட்ட தேர்வுகள்துறை கூடுதல் இயக்குனர் ராகினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

First published:

Tags: Kancheepuram, Local News