காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடம் பெற்ற 163 மாணவர்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடம் பெற்ற 163 மாணவர்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கினார்.
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழர்களின் தனித்த அடையாளமே கலை, பண்பாடு, நாகரிகம் அந்த பரம்பரிய கலை வடிவங்களையும் பண்பாட்டையும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கலைத் திறனை வெளிகொண்டு வர பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழாக்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 167 வகையான கலை போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 13.01.2023 அன்று நடைபெற்ற விழாவில் கலை அரசன் – கலை அரசி என்ற விருதினையும் பரிசு மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் தரவரிசையில் முதல் 20 இடங்களை பெற்ற மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர் என்றார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி அளவிலான தனி நபர் போட்டியில் 46,365 மாணவர்களும் குழு போட்டிகளில் 25,000 மாணவர்களும் கலந்து கொண்டனர். வட்டார அளவில் தனி நபர் பிரிவில் 3,916 மாணவர்களும் குழு போட்டியில் 7,756 மாணவர்கள் என மொத்தம் 11,675 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் தனிப்பிரிவில் 863 மாணவர்களும், குழு போட்டிகளில் 2,614 மாணவர்களும் கலந்து கொண்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 513 மாணவர்கள் மாநில அளவிலான கலைப்போட்டிகளில் பங்கு பெற்றனர். இதில் வெற்றி பெற்ற 23 மாணவர்கள் மாநில அளவிலான கலை அரசன் – கலை அரசி விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளனர். அவர்களுக்கு, மேலும் காஞ்சிபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் முதல் இடம் பெற்று சான்றிதழ்களும் பரிசுகளும் பெற்ற 163 மாணவர்களுக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அமைச்சர் அன்பரசன் கூறினார்.
மேலும் 2021-2022-ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் கல்விச் செயல்பாடுகள் மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் 11 பேருக்கு தலா ரூ.10,000/- ரொக்கப்பணம், 12ஆம் வகுப்பு மாணவர்கள் 9 பேருக்கு தலா ரூ.20,000/- ரொக்கப்பணமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்,சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், செல்வபெருந்தகை, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kancheepuram, Local News