முகப்பு /காஞ்சிபுரம் /

ஜல்ஜீவன் மிஷன் திட்டம்.. காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு மத்திய அரசு விருது!

ஜல்ஜீவன் மிஷன் திட்டம்.. காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு மத்திய அரசு விருது!

X
பிரதமரிடம்

பிரதமரிடம் விருதை பெறும் கலெக்டர் ஆர்த்தி

Central Government Special Award To Kanchipuram Collector : நாடு முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கும் மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதாக காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு மத்திய அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Kanchipuram, India

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களிலேயே காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு மாவட்ட முழுவதும் உள்ள மக்களுக்கு மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைத்து குழாய்கள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பணி செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை ஆய்வு செய்து பதிவு செய்து கொண்ட மத்திய அரசின் ஆய்வு குழுவினர், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை சிறப்புடன் செயல்படுத்தியதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி ஐ.ஏ.எஸ். அவர்களை மத்திய அரசின் விருதுக்கு தேர்வு செய்தனர். அதன்படி நாடு முழுவதும் மத்திய அரசின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.

குடிமைப் பணிகள் அதிகாரிகள் தினத்தை முன்னிட்டு டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டு ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தை 2022 ஆண்டு திறம்பட செயல்படுத்தி தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி அவர்களுக்கு மத்திய அரசின் விருதையும், பாராட்டு பத்திரம் மற்றும் கேடயத்தையும் வழங்கி கௌரவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தமிழ் நாட்டின் பெருமையை நிலைநாட்டி, பிரதமரிடம் பாராட்டு பத்திரத்தையும், கேடயத்தையும் பெற்ற காஞ்சிபும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: Kanchipuram, Local News