முகப்பு /காஞ்சிபுரம் /

கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ்! புதிய கட்டிடத்திற்கு மாறிய கனரா வங்கியின் காஞ்சிபுரம் கிளை!

கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ்! புதிய கட்டிடத்திற்கு மாறிய கனரா வங்கியின் காஞ்சிபுரம் கிளை!

X
கனரா

கனரா வங்கி

Kanchipuram Canara Bank | காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் கனரா வங்கி கிளை இடமாற்றம் செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram | Kancheepuram (Kanchipuram)

காஞ்சிபுரம் தேரடி பகுதியில் 51 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் பொதுத்துறை அரசு வங்கியான கனரா வங்கியில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமானதால் வாடிக்கையாளர்கள் உட்கார்ந்து செல்வதற்கு கூட இட வசதி இல்லாமல் இருந்தது. வாடிக்கையாளர்களுக்கு குறைவில்லாமல் வங்கி சேவையை வேண்டும் என்ற நோக்கில் விசாலமான இடத்தில் கனரா வங்கியின் கிளையை மாற்றி காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில்புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் கனரா வங்கி கிளை இடமாற்றம் செய்யப்பட்டது.

இடமாற்றம் செய்யப்பட்ட கனரா வங்கி திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவில் கனரா வங்கிகளின் சென்னை மண்டல பொது மேலாளர் ரவிவர்மா கலந்துகொண்டு வங்கியை திறந்து வைத்தார்.

பின்னர் வாடிக்கையாளர்களிடம் உரையாற்றிய ரவிவர்மா, “பொதுமக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களுக்கு கடன் உதவி கொடுப்பதில் முதன்மை வங்கியாக செயல்படுவது பெருமையாக உள்ளது என்றும், கனரா வங்கியில் வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள் தங்கள் குடும்பத்தை காத்திடவும் தங்கள் வாழ்வாதாரத்தை காத்துக் கொள்ளவும் அரசு அறிவித்துள்ள குறைந்த பிரிமியத்துடன் கூடிய காப்பீட்டு திட்டங்களில் பணத்தை செலுத்தி பயன்பெற வேண்டும்.

வங்கிகளில் செயல்படுத்தப்படும் குறைந்த கட்டணத்துடன் கூடிய காப்பீடு திட்டங்களை தங்கள் குடும்பத்தினருக்கும் எடுத்துக் கூறி அவர்களையும் காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்”.பின்னர் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடனுதவி க்கான காசோலைகளையும் வழங்கினார். வங்கி கிளை திறப்பு விழாவில் காஞ்சிபுரம் மண்டல துணை பொது மேலாளர் காளி காஞ்சிபுரம் கிளையின் முதன்மை மேலாளர் கார்த்திகேயன் மற்றும் வங்கி வாடிக்கையாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

First published:

Tags: Canara Bank, Kanchipuram, Local News