முகப்பு /காஞ்சிபுரம் /

மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் இடமாற்றம்.. காஞ்சிபுரம் கலெக்டர் அறிவிப்பு..

மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் இடமாற்றம்.. காஞ்சிபுரம் கலெக்டர் அறிவிப்பு..

மாதிரி படம்

மாதிரி படம்

Camp Relocation For Differently Abled in Kancheepuram : காஞ்சிபுரத்தில், 23.05.2023-ல் நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு மாதத்தின் 2வது மற்றும் 4வது செவ்வாய்க்கிழமைகளில் அரசு மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள அஞ்சுகம் திருமண மண்டபத்தில் இதுவரை நடைபெற்று வந்தது.

23.05.2023 அன்று அஞ்சுகம் திருமண மண்டபத்தில் வேறு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் அன்றைய முகாம் மட்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் மையம் கூட்ட அரங்கில் (GDP HALL) நடைபெற உள்ளது.

இதையும் படிங்க : இந்த நாயின் விலை ரூ.80 ஆயிரம்..! அமெரிக்கன் காக்கர் நாய் பற்றிய ஆச்சர்ய தகவல்கள்..!

இம்முகாமில் தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் 1.ஆதார் அட்டை 2.குடும்ப அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் 4 ஆகியவற்றுடன் முகாமில் கலந்துக்கொண்டு தேசிய அடையாள அட்டை பெற்று பயனடைந்திடலாம்” என தெரிவித்துள்ளார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Kanchipuram, Local News