முகப்பு /காஞ்சிபுரம் /

நடனம் மட்டுமல்ல சமூக சேவைலயும் கலக்குவோம்ல.... காஞ்சியில் டான்ஸ் டீம் சார்பில் ரத்ததான முகாம்..!

நடனம் மட்டுமல்ல சமூக சேவைலயும் கலக்குவோம்ல.... காஞ்சியில் டான்ஸ் டீம் சார்பில் ரத்ததான முகாம்..!

X
ரத்ததான

ரத்ததான முகாம்

Kanchipuram District | காஞ்சிபுரத்தில் "புதிய புயல்" டான்ஸ் டீம் மற்றும் பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரத்தில் \"புதிய புயல்\" டான்ஸ் டீம் மற்றும் பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட ரத்தம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் காஞ்சிபுரம் \"புதிய புயல்\" டேன்ஸ் டீம் சார்பில் பொதுமக்களிடையே \"தானத்தில் சிறந்த தானமான இரத்ததானம்\" என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

டான்ஸ் டீம் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற, இந்த இந்த ரத்ததான முகாமிற்கு, டான்ஸ் டீமின் நடன இயக்குனர் தமிழ்செல்வன் மற்றும் டான்ஸ் டீமின் நிறுவனர் கிருஷ்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமை பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் அருண்குமார் துவக்கி வைத்தார்.

Read More : தமிழ்நாடா - தமிழகமா என்று விவாதத்தைவிட இதுதான் அவசியம் - அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்!

இந்த ரத்த தான முகாமில் நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். மேலும் இதில் ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இறுதியாக ரத்ததான முகாமில் பெறப்பட்ட அனைத்து ரத்தம் முழுவதும், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

First published:

Tags: Kanchipuram, Local News