ஹோம் /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் | தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஒலிமுகமதுப்பேட்டையில் நடைபெற்ற ரத்ததான முகாம்

காஞ்சிபுரம் | தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஒலிமுகமதுப்பேட்டையில் நடைபெற்ற ரத்ததான முகாம்

X
ரத்ததான

ரத்ததான முகாம்

Kancheepuram | காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஒலிமுகமதுப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இரத்ததான முகாம் மற்றும் தொடர் இரத்த கொடையாளர்களுக்கான சிறப்பு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

74-வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஒலிமுகமதுப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இரத்ததான முகாம் மற்றும் தொடர் இரத்த கொடையாளர்களுக்கான சிறப்பு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதில் பல்வேறு தரப்பினரும் தயக்கம் காட்டி வந்த நிலையில் இவர்களின் பங்கு அளப்பரியது என்று அனைத்து மதத்தினரும் பாராட்டினர். கொரோனா காலத்தில் பட்டினியால் வாடிய சாலையோர மக்களுக்கு உணவளித்தனர்.

ரத்ததான முகாம் 

இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தொடர் ரத்த கொடையாளர்களுக்கு சிறப்பு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஒலிமுகமது பேட்டையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

பாராட்டு சான்றிதழ் வழங்கும் காவல் அதிகாரி

100-க்கும் மேற்பட்டோர் இந்த இரத்ததான முகாமில் பங்கேற்று இரத்த தானம் வழங்கினர். அதன் பின் தொடர் இரத்த கொடையாளர்களுக்கான சிறப்பு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் அல்அமீன், “கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பாக இதுவரை 1035 யூனிட்டுகள் ரத்தம் 10 முகாம்கள் வழியாகவும், அவசர இரத்ததான சேவைகளின் வழியாக வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தொடர் இரத்த கொடையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பாராட்டு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது என்றும், இஸ்லாமிய சமுதாயம் ஜாதி, மத பேதமில்லாமல் அனைத்து மக்களுக்கும் பயன்படக் கூடிய வகையில் இந்த இரத்த தானத்தை செய்து வருகின்றது.

காஞ்சிபுரத்தில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு பேரணி!

கடந்த ஆண்டு மட்டும 1035யூனிட் இரத்தம் அரசு மருத்துவமனைக்கு தான் கொடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

செய்தியாளர்: கார்த்திக், காஞ்சிபுரம்.

First published:

Tags: Kanchipuram, Local News