முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் மகளிர் திட்ட அலுவலகத்தில் வேலை.. என்னென்ன தகுதிகள் வேண்டும்?

காஞ்சிபுரம் மகளிர் திட்ட அலுவலகத்தில் வேலை.. என்னென்ன தகுதிகள் வேண்டும்?

மாதிரி படம்

மாதிரி படம்

Jobs in Kanchipuram : காஞ்சிபுரம் வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 3 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடத்திற்கு தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (Block Co-ordinator) பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) என்பது கிராமப்புற வறுமையை போக்கவும் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு முக்கிய திட்டமாகும்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம் அலுவலகம், வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலிப்பணியிடமாக உள்ள 3 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (BC) பணியிடங்களுக்கு கீழ்கண்ட விவரங்கள் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதையும் படிங்க : "கருவிகள் வேண்டாம் வாயே போதும்" வாயாலே இசைத்து அசத்திய குரலிசை கலைஞர்!

கல்வி மற்றும் பிறதகுதிகள்

1.கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.6 மாத காலம் கணினி பயிற்சி (MS Office) பெற்றிருக்க வேண்டும்.

2.வயது : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3. முன் அனுபவம் : குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர் மேம்பாட்டு திட்டம் தொடர்பான பணிகளில் முன் அனுபவம் பெற்று பணியாற்றி இருக்க வேண்டும்.

4.இருப்பிடம் : சம்மந்தப்பட்ட வட்டாரத்தை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும்.

5.பாலினம் : பெண்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 15.06.2023

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 3 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடத்திற்கு தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை 15.06.2023-க்குள் அனுப்பி பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Jobs18, Kanchipuram, Local News