கழுத்தில் மதுபான பாட்டில்களை மாலையாக அணிந்து கொண்டு மதுபான கடையை மூடக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பாஜக-வினரால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே அன்னை இந்திரா காந்தி சாலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் சித்ரகுப்தருக்கென தனிகோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கிளிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த பிரசித்தி பெற்ற சித்ரகுப்தர் கோவில் அருகே அரசு மதுபானக் கடையை இயங்கி வருகிறது. கோவிலுக்கு அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடையால் புனித தன்மை சீர்குலைந்து அசுத்தம் ஏற்பட்டு வருவதால் பக்தர்களும் அப்பகுதி மக்களும் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். இதுவரை அந்த மதுபானக் கடை அகற்றப்படாமல் இருக்கும் சூழ்நிலையில் தினந்தோறும் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆகையால் இந்த மதுபானக் கடையை அகற்ற பாரதிய ஜனதா கட்சி காஞ்சிபுரம் மாவட்ட ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பட்டு மாவட்ட தலைவர் அதிசயம் குமார் தலைமையில் டாஸ்மார்க் கடை முன்பு பந்தல் அமைத்து சிவ வாத்தியம் முழங்க சிவனடியார்கள் அறவழியில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
ஏரி சீரமைப்பு பணிகளில் முறைகேடு... காஞ்சியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News