முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் திருடிய வாகனத்தை பந்தாவாக ஓட்டிச்சென்ற ஆசாமி!!!

காஞ்சிபுரத்தில் திருடிய வாகனத்தை பந்தாவாக ஓட்டிச்சென்ற ஆசாமி!!!

பைக் உரிமையாளர் விட்டு சென்ற பைக்கை திருடிச் செல்லும் ஆசாமி

பைக் உரிமையாளர் விட்டு சென்ற பைக்கை திருடிச் செல்லும் ஆசாமி

Kancheepuram Bike Theft | ஆட்கள் நடமாட்டம் உள்ள முக்கிய சாலையில் நிறுத்திய பைக்கை கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர் திருடி சென்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

நடைபாதை வியாபாரிகளிடம் வாடகை வசூல் செய்யச் சென்ற வாலிபரிடம் காஞ்சிபுரத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தை திருட்டி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், மாநகராட்சி பகுதிகளில் நடைபாதையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடம் வாடகை வசூல் செய்யும் ஒப்பந்ததாரரிடம் பணி செய்து வருகிறார்.

இந்நிலையில் சுரேஷ் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பேருந்து நிலையம் அருகே வணிகர் வீதியில் நடைபாதை வியாபாரிகளிடம் வாடகை வசூல் செய்வதற்காக சாலையில்  இருசக்கர வாகனத்தை இயங்கிய நிலையிலேயே நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இதனை கண்காணித்தபடி இருந்த மர்மநபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனத்தை எடுத்துக் கொண்டு மாயமாகிவிட்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர் திரும்பி வந்து பார்த்த சுரேஷ் தனது இருசக்கர வாகனம் மாயமானது குறித்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் புகாரின் பேரில் சிவகாஞ்சி போலீசார் அந்தப் பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கை திருடி சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் உள்ள முக்கிய சாலையில் நிறுத்திய பைக்கை கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

First published:

Tags: Crime News, Kancheepuram, Local News