முகப்பு /காஞ்சிபுரம் /

வட மாநில பயணி ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை தேடி சென்று திருப்பிக் கொடுத்த நேர்மையான ஆட்டோ டிரைவர்...

வட மாநில பயணி ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை தேடி சென்று திருப்பிக் கொடுத்த நேர்மையான ஆட்டோ டிரைவர்...

பணத்தை திருப்பி கொடுத்த ஆட்டோ டிரைவரை பாராட்டும் மக்கள் 

பணத்தை திருப்பி கொடுத்த ஆட்டோ டிரைவரை பாராட்டும் மக்கள் 

Kancheepuram Auto Driver | வறுமையில் இருந்தாலும் நேர்மையாக பணத்தை தேடி வந்து கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் பூபாலனை அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரத்தில் வடமாநில பயணி ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை தேடி சென்று திருப்பிக் கொடுத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர். 

காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன் ஏழ்மை நிலையில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காஞ்சிபுரத்திற்கு வடமாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்த பயணிகள் சிலரை பெரிய காஞ்சிபுரம் யாத்திரி நிவாஸ் பகுதியில் இருந்து ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் அழைத்துச் சென்று விட்டுள்ளார்.

பின்னர் பயணிகளை இறக்கி விட்டு விட்டு செவிலிமேட்டில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு மதிய உணவு அருந்த சென்று ஆட்டோவை நிறுத்தி உள்ளார். அப்பொழுது ஆட்டோவின் பின் இருக்கையில் பை ஒன்று இருப்பதை கண்டு  அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அந்த பையை  திறந்து பார்த்தபோது  ரூ. 50 ஆயிரம்  ரொக்க பணமும், அடையாள அட்டை, ஏடிஎம் கார்டு, பேருந்து அனுமதி சீட்டு உள்ளிட்டவை  இருந்துள்ளது.

இதனையடுத்து  அடையாள அட்டையிலிருந்த புகைப்படத்தை பார்த்து ஆட்டோவில் வந்த வடமாநில பயணி கைப்பையை விட்டுச் சென்றிருக்கலாம் என உறுதிப்படுத்திக் கொண்ட ஆட்டோ டிரைவர் பூபாலன் உடனடியாக பெரிய காஞ்சிபுரம் யாத்ரி நிவாஸ் பகுதிக்கு விரைந்துள்ளார். அங்கு பணப்பையை தவறவிட்டு தேடிக் கொண்டிருந்த வட மாநில சுற்றுலா பயணியை அட்டையை வைத்து தேடி கண்டுபிடித்து பணப்பையை திருப்பி வழங்கி உள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தவறவிட்ட பணப்பையை நேர்மையாக திருப்பி கொண்டு வந்து கொடுத்த ஆட்டோ டிரைவர் பூபாலனை மகிழ்ச்சியில் வடமாநிலக சுற்றுலா பயணி கட்டி பிடித்து வாழ்த்தினார். ஆட்டோ டிரைவரின் நேர்மையை வடமாநில சுற்றுலா பயணிகளும் பாராட்டி அவருக்கு பரிசு வழங்கினார்கள். இச்சம்பவம் குறித்து அறிந்த சக ஆட்டோ ஓட்டுநர்கள் ஏழ்மை நிலையிலும் ஆட்டோ ஓட்டுனர் பூபாலனின் நேர்மையை பாராட்டி அனைவரும் பூபாலனுக்கு மாலை அணிவித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

First published:

Tags: Kancheepuram, Local News