தமிழ்நாடு அரசு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில் முனைவோர்களுக்கென சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை தமிழக அரசு இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையிர் சட்ட மன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில் முனைவோர் தொடங்கவிருக்கும், உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த நேரடி வேளாண்மை தவிர்த்த தொழில் திட்டங்களுக்கும் வங்கி கடனுதவியோடு மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பதாரர்களுக்கு எந்தவித கல்வித்தகுதியும் தேவையில்லை, வயது வரம்பு 55க்கு மிகாமலும் இருக்க வேண்டும், புதிய தொழில் முனைவோராகவும், ஏற்கனவே தொழில் தொடங்கி அதனை விரிவு படுத்த விரும்புவோரும் விண்ணப்பிக்கலாம்.
அதிக பட்ச மானிய தொகை 1.5 கோடியும், மாதாந்திர வட்டி தொகையில் 6 சதவீதத்திற்கு வட்டி மானியமும், மொத்த திட்டத்தொகையில் 65 சதவீத வங்கி கடனாகவும், 35 சதவீத அரசின் மானியமாகவும்வழங்கப்படும். எனவே பயனாளர்கள் தம் பங்காக விளிம்புத் தொகை செலுத்த வேண்டிய தேவை இல்லை.
திறன் மேம்பாட்டு பயிற்சி
தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பான சிறப்பு பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சியினை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும் . இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.gov.in என்ற இணையத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகள் மாவட்ட தொழில் மையத்தில் வழங்கப்படும் கடன்பெறுவது தொடர்பாக நிதி நிறுவனங்களுடன் இணைப்பு பாலமாகவும் மாவட்ட தொழில் மையம் விளங்கும்.
இதற்கு தகுதியும் ஆர்வமும் கொண்ட எஸ்.சி., எஸ்.டி. தொழில் முனைவோர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறவேண்டுமென கேட்டக்கொள்ளப்படுகிறார்கள், மேலும் விவரங்களை பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம், என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 044/27238837, 27238551 என்ற தொலைப்பேசி எண்ணிலோ அல்லது 7904559090, 95669 90779 செல்போன் எண்ணின் மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர்(பொறுப்பு) கோ.சிவருத்ரய்யா தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, Kanchipuram, Local News, SC / ST Act