ஹோம் /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் துணிவு ரிலீஸ் - அஜித் ரசிகர்கள் நள்ளிரவில் பலே கொண்டாட்டம்...!

காஞ்சிபுரத்தில் துணிவு ரிலீஸ் - அஜித் ரசிகர்கள் நள்ளிரவில் பலே கொண்டாட்டம்...!

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் : துணிவு ரிலீஸ்

Thunivu Ajith Fans Celebration | காஞ்சிபுரம் மாநகரில் உள்ள ரயில்வே சாலை அமைந்துள்ள அருணா தியேட்டரில் டிஜே மியூசிக் ( DJ MUSIC ) அமைக்கப்பட்டு அஜித் படம் மற்றும் மற்ற சினிமா படங்களின் பாடல்கள் இசைக்கப்பட்டு அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியாக நடனம் ஆடினர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

அஜித்குமார் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கியுள்ள புதிய படம் துணிவு. படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திர கனி, பகவதி பெருமாள் அஜய், வீரா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உலகம் முழுவதும் 'துணிவு' படம் இன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் முதல்காட்சியாக நள்ளிரவு 1 மணிக்கு தியேட்டர்களில் துணிவு திரைப்படம் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகரில் உள்ள ரயில்வே சாலை அமைந்துள்ள அருணா தியேட்டரில் டிஜே மியூசிக் ( DJ MUSIC ) அமைக்கப்பட்டு அஜித் படம் மற்றும் மற்ற சினிமா படங்களின் பாடல்கள் இசைக்கப்பட்டு அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியாக நடனம் ஆடினர். அதேபோல் சரம் வானவேடிக்கைகள் உள்ளிட்டவை வெடிக்கப்பட்டு திரைப்படத்தை வரவேற்றனர்.

நள்ளிரவில் களைகட்டிய காஞ்சி நகரம்..

நள்ளிரவு 1 மணி காட்சி என்றாலும், பெண்கள் குழந்தைகள் உட்பட குடும்பத்துடன் வந்தும் அஜித் திரைப்படத்தை கண்டு ரசித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதே போல் மற்றொரு திரையரங்கான பாபு திரையரங்கத்திலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை கண்டு ரசித்தனர்.திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த அஜித் கட்டவுட் அருகே செல்ஃபி எடுத்துக் கொண்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.சில ரசிகர்கள் அஜித் பேனர்களுக்கு பால் அபிஷேகமும் செய்தனர். தொடர்ந்து ரசிகர்கள் அஜித் பெயரை உச்சரித்து ஆரவாரத்துடன் திரைப்படத்தை கண்டு களித்து வருகின்றனர்.

துணிவு திரைப்படம் காஞ்சிபுரம் தியேட்டர்களில் வெளியான நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

First published:

Tags: Actor Ajith, Cinema, Kancheepuram, Local News, Thunivu