ஹோம் /காஞ்சிபுரம் /

காஞ்சி கூரம் கிராமத்தில் நாற்று நடும் பயிற்சியை மேற்கொண்ட விவசாய கல்லூரி மாணவர்கள்

காஞ்சி கூரம் கிராமத்தில் நாற்று நடும் பயிற்சியை மேற்கொண்ட விவசாய கல்லூரி மாணவர்கள்

காஞ்சி கூரம் கிராமத்தில் நாற்று நடும் பயிற்சியை மேற்கொண்ட கல்லூரி மாணவர்கள்

காஞ்சி கூரம் கிராமத்தில் நாற்று நடும் பயிற்சியை மேற்கொண்ட கல்லூரி மாணவர்கள்

Kancheepuram Agriculture practice camp | நாற்று நடுதல் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டதையடுத்து மாணவியர் வயலில் இறங்கி நாற்று நட்டு பயிற்சி பெற்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் விவசாயக்கல்லூரி மாணவியர்கள் 11 பேர் தங்கியிருந்து விவசாயத் தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்ளும் பயிற்சி முகாம் தொடங்கியது.

காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள டான்போஸ்கோ வேளாண்மைக் கல்லூரி மாணவியர் 11 பேர் அக்கிராமத்திலேயே 70 நாட்கள் தங்கியிருந்து வேளாண்மை தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்ளும் பயிற்சி முகாம் தொடங்கியது.

பயிற்சியை வேளாண்மை இணை இயக்குநர் முகம்மது ரபீக் தொடக்கி வைத்தார்.விளை நிலங்களில் நாற்று நடுதல், உரமிடுதல்,களையெடுத்தல் உள்ளிட்ட விவசாயத் தொழில் நுட்பங்களை விவசாயிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நாற்று நடுதல் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டதையடுத்து மாணவியர் வயலில் இறங்கி நாற்று நட்டனர்.பயிற்சி முகாம் தொடக்க விழாவில் வேளாண்மை அலுவலர்கள்,உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,வேளாண்மைக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவியர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Agriculture, Kancheepuram, Local News