முகப்பு /காஞ்சிபுரம் /

ஏசிகளை குறி வைத்து திருடும் ”பாய்ஸ்” காஞ்சிபுரத்தில் பரபரப்பு!

ஏசிகளை குறி வைத்து திருடும் ”பாய்ஸ்” காஞ்சிபுரத்தில் பரபரப்பு!

சிசிடிவியில் சிக்கிய கொள்ளையன்

சிசிடிவியில் சிக்கிய கொள்ளையன்

Kanchipuram theft | காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியிலுள்ள ஓர் தனியார் திருமண மண்டபத்தில் AC காப்பர் ஓயர்களை மர்மநபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram | Kancheepuram (Kanchipuram)

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியிலுள்ள ஓர் தனியார் திருமண மண்டபத்தில் 6 ஏசி OUTDOOR பாக்ஸில் காப்பர் ஓயர்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் திவீரமாக தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கை மிலிட்டரி ரோடு‌ சாலையினாது காஞ்சிபுரத்திலிருந்து-வாலாஜாபாத் செல்லக்கூடிய சாலையாகவும் இருந்து வருகிறது.இதன் காரணமாக இச்சாலையில் 24மணி நேரமும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்தே காணப்படும். இந்த சாலையில் மூன்றுக்கும் மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்கள் இருந்து வருகின்றன.இந்த நிலையில் அதில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணத்தின் போது மணமக்கள் வீட்டார் தங்க AC வசதியுடன் கூடிய அறைகளும், AC வசதி அல்லா அறைகளும் என சுமார் 10-க்கும் மேற்பட்ட அறைகள் இருக்கின்றன.

இந்த நிலையில் AC outdoor box-லிருந்து காப்பர் ஓயிர்களானது திருடப்பட்டிருக்கிறது. இது குறித்து மண்டபத்தின் உரிமையாளர் மண்டபம் முழுவதுமுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது சுவர் ஏறி குதித்து மர்ம நபர்கள் சிலர் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து AC OUTDOOR பாக்ஸிலிருந்து காப்பர் ஓயர்களை திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து மண்டபத்தின் உரிமையாளர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இது போன்றே அப்பகுதியிலுள்ள குடியிருப்புகளிலும் AC-யின் OUTDOOR பாக்ஸிலிருந்து காப்பர் ஒயர்கள் திருடப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

First published:

Tags: AC, Kanchipuram, Local News, Theft