முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறைவு- பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

காஞ்சிபுரத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறைவு- பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

சான்றிதழ் வழங்கும் அதிகாரி

சான்றிதழ் வழங்கும் அதிகாரி

Kanchipuram | காஞ்சிபுரத்தில் கடந்த 12 நாட்களாக நடந்து வந்த பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரத்தில் கடந்த 12 நாட்களாக நடந்து வந்த பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பேரிடர் காலங்களில் பாதிக்கப்படுவோரைமுதலுதவி செய்து எப்படிக் காப்பாற்றுவது என்பது தொடர்பான பயிற்சி கடந்த 12 நாட்களாக காஞ்சிபுரம் அருகேயுள்ள சங்கரா கலை அறிவியல் கல்லூரியில் ஆப்தமித்ரா திட்டம் என்ற பெயரில் நடைபெற்று வந்தது.

பயிற்சிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா தலைமை வகித்து 150க்கும் மேற்பட்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியர் கனிமொழி, பேரிடர் மேலாண்மைத்துறை வட்டாட்சிர் தாண்டவமூர்த்தி, வட்டாட்சியர் புவனேசுவரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காஞ்சிபுரம் கருப்படிதட்டடை ஊராட்சியில் இலவச கண்சிகிச்சை முகாம்..

பேரிடர் பயிற்சி வழங்கிய இஎம்ஆர்ஐ நிறுவன நிர்வாகி டி.எல்.நந்த கோபால் வரவேற்று பேசினார். விழாவில் பயிற்சி ஆட்சியர் அம்ரித் ஜெயின், கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன்உட்பட பலரும் கலந்து கொண்டனர். பேரிடரின் போது பயன்படுத்த வேண்டிய உபகரணங்கள் மற்றும் அது தொடர்பான கையேடுகளும் வழங்கப்பட்டன.

First published:

Tags: Kanchipuram, Local News