ஹோம் /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் | போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 15 வருட சிறை தண்டணை

காஞ்சிபுரம் | போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 15 வருட சிறை தண்டணை

தண்டனை விதிக்கப்பட்டவர்

தண்டனை விதிக்கப்பட்டவர்

Kanchipuram | காஞ்சிபுரத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரணக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேலன். அவருக்கு வயது 42. கடந்த 2015-ம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது சம்பந்தமாக அப்போதைய காவல் ஆய்வாளர் கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து சிங்காரவேலனை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

பின்னர் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இந்த வழக்கானது மாற்றம் செய்யப்பட்டு,வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிங்காரவேலனை குற்றவாளி என உறுதிசெய்து 15 வருடம் சிறை தண்டனை, ரூபாய் 15,000 அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டார்‌.

காஞ்சிபுரத்தில் காவு வாங்கும் பாழடைந்த கிணறு- சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கைவிடுத்த நாம் தமிழர்

மேலும் இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டணை பெற்றுதர சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர், நீதிமன்ற விசாரணை பணிகளை மேற்கொண்ட காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் ஆய்வாளர் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் வெகுவாக பாராட்டினார்.

செய்தியாளர்: கார்த்திக், காஞ்சிபுரம்.

First published:

Tags: Kanchipuram, Local News