முகப்பு /செய்தி /கள்ளக்குறிச்சி / மளிகை கடையில் வாங்கிய சாக்லேட்டில் புழு.. வாடிக்கையாளர் அதிர்ச்சி!

மளிகை கடையில் வாங்கிய சாக்லேட்டில் புழு.. வாடிக்கையாளர் அதிர்ச்சி!

சாக்லேட்டில் புழு

சாக்லேட்டில் புழு

Worm in chocolate | வழக்கம் போல் கடையில் சாக்லேட் வாங்கி சென்றவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.

  • Last Updated :
  • Ulundurpettai, India

உளுந்தூர்பேட்டையில் மளிகைக்கடையில் வாங்கிய சாக்லெட் புழுக்கள் நெளியும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் வசித்து வரும் அருண் அங்குள்ள ஒரு மளிகை கடையில் ரூபாய் 85 மதிப்பிலான சாக்லேட் ஒன்றை வாங்கினார். அதனை வீட்டிற்கு சென்று சாப்பிடுவதற்காக திறந்து பார்த்தபோது அதில், மூன்று புழுக்கள் நெலிந்து கொண்டிருந்ததையும், கழிவு பொருட்களையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே உளுந்தூர்பேட்டையில் உள்ள கடைகளில் தரமற்ற பொருட்கள் மற்றும்  காலாவதியான பொருட்களும் விற்கப்பட்டு வருவதாக பலமுறை புகார் எழுந்து உள்ள நிலையில் உணவு பாதுகாப்புத் துறையினர் குறிப்பிட்ட கடையில் மட்டுமே சோதனை செய்துவிட்டு சென்று விடுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் தொடர்ந்து பல கடைகளில் குழந்தைகள் சுவைத்து சாப்பிடும் சாக்லேட் வகைகளை  காலாவதியாகி விற்கப்படுவதாகவும் தரமற்ற முறையிலும் விற்கப்படுவதால் இந்தப் பகுதியில் உள்ள கடைகளை மாநில உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனையிட உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

top videos

    செய்தியாளர்: எஸ்.செந்தில்குமார், கள்ளக்குறிச்சி.

    First published:

    Tags: Chocolate, Local News, Ulundurpet