முகப்பு /செய்தி /கள்ளக்குறிச்சி / பெண் வட்டாட்சியரை மிரட்டும் விசிக பிரமுகர்.. பரபரப்பு வீடியோ

பெண் வட்டாட்சியரை மிரட்டும் விசிக பிரமுகர்.. பரபரப்பு வீடியோ

விசிக பிரமுகர் மிரட்டல்

விசிக பிரமுகர் மிரட்டல்

  • Last Updated :
  • Kallakkurichi (Kallakurichi), India

கள்ளக்குறிச்சியில் பெண் வட்டாட்சியரை விசிக மாவட்ட செயலாளர் தரக்குறைவாக  பேசுவதுடன் பகிரங்கமாக மிரட்டும் வீடியோ  காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள அ.வாசுதேவனூர் கிராம பேருந்து நிறுத்தம் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பம் நடுவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த  சில தினங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் கொடி கம்பம் விடுதலை சிறுத்தை கட்சியினர் அமைத்தனர். அப்போது அங்கு சென்ற சின்ன சேலம் வட்டாட்சியர் இந்திரா அனுமதி இல்லாமல் கொடி கம்பம் அமைத்தால் பிரச்சனை ஏற்படும் அதனால் அந்த கொடி கம்பத்தை இங்கு அமைக்க கூடாது அதனை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தை கட்சியினர் காவல்துறை மற்றும் வட்டாட்சியர் இந்திராவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வட்டாட்சியர் இந்திராவை விசிக மாவட்ட செயலாளர் தனபால் கடுமையாக திட்டியதுடன் தகாத வார்த்தையில் பேசி பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் இந்திரா சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து விசிக மாவட்ட செயலாளர் தனபால் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் இரவோடு இரவாக அந்த கொடி கம்பம் அகற்றப்பட்டது. இந்த நிலையில் வட்டாட்சியர் இந்திராவை பெண் என்று கூட பார்க்காமல் கடுமையாக விசிக மாவட்ட செயலாளர் தனபால் மிரட்டி  தகாத வார்த்தையால் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்கள் வைரல் ஆகி வருகிறது.

செய்தியாளர் : எஸ்.செந்தில்குமார்  (கள்ளக்குறிச்சி)

top videos
    First published:

    Tags: Kallakurichi, Tamil News, Villupuram