கள்ளக்குறிச்சி அருகே உயிரிழந்த தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற, அவரது சடலத்தின் முன்பு, மகன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது மகன் பிரவீனுக்கு வரும் 27ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மகனின் திருமணத்தைப் பார்க்காமலேயே அவரது உயிர் பிரிந்தது.
இந்த நிலையில் தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் தந்தையின் சடலம் முன்பு அவரது மகன் பிரவீன் தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த சொர்ணமால்யா என்ற பெண்ணின் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சம்மதத்தை பெற்று இறந்து தந்தை ராஜேந்திரன் சடலத்தின் முன் திருமணம் செய்து கொண்டார்.
தந்தையின் இறுதி ஆசையை நிறேவேற்றும் விதமாக திருமணம் செய்த பிரவீன் மற்றும் அவரது விருப்பத்திற்கு ஒத்துழைப்பு நல்கி சம்மதித்த மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் செயல் அப்பகுதியில் பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.
செய்தியாளர்: செந்தில்குமார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kallakurichi, Local News