முகப்பு /செய்தி /கள்ளக்குறிச்சி / சொத்தில் பங்கு கேட்ட தம்பி... அடித்தே கொன்ற அண்ணன்... கள்ளக்குறிச்சியில் பயங்கரம்!

சொத்தில் பங்கு கேட்ட தம்பி... அடித்தே கொன்ற அண்ணன்... கள்ளக்குறிச்சியில் பயங்கரம்!

தம்பி - அண்ணன்

தம்பி - அண்ணன்

Kallakurichi Murder | சொத்தை பிரித்து தர கேட்டு தொல்லை செய்த தம்பியை அண்ணன் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Kallakkurichi (Kallakurichi), India

உளுந்தூர்பேட்டை அருகே  பிள்ளையார்குப்பம் கிராமத்தில் சொத்தில் பங்கு கேட்ட தம்பியை அடித்து கொலை செய்த அண்ணனை திருநாவலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு கமலக்கண்ணன், பிரபு, இளையராஜா ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். ஏழுமலை கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில் சொத்துக்களை மூத்த மகன் கமலக்கண்ணன் பராமரித்து வந்தார்.

இந்தநிலையில் திருமணம் ஆகாத இளையராஜா என்பவர் அரசு வழங்கிய தொகுப்பு வீட்டினை கட்டுவதற்கு கூடுதலாக கடன் வாங்கியுள்ளார். இதனால் இளையராஜாவுக்கு கடன் தொல்லை அதிகமானதால் தனது மூத்த அண்ணன் கமலக்கண்ணனிடம் தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்த தர சொல்லி தினமும் நச்சரித்து வந்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க; பேனா நினைவுச் சின்னம்... உச்சநீதிமன்றத்தில் ஜெயக்குமார் வழக்கு...!

வழக்கம் போல் நேற்று முன்தினம் தனக்கு சேர வேண்டிய பாகத்தை பிரித்து தர சொல்லி அண்ணனிடம் மீண்டும் வாய்த்தகாரில் ஈடுபட்ட போது, ஆத்திரம் அடைந்த அண்ணன் கமலக்கண்ணன் தம்பி இளையராஜாவை  கால்களால் எட்டி மிதித்தும் கையால்  சரமாரியாக அடித்து தாக்கியும் உள்ளார். இதனால் படுகாயமடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இளையராஜாவை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த இளையராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அண்ணன் கமலக்கண்ணனை கைது செய்தனர்.

top videos

    செய்தியாளர்: எஸ் .செந்தில்குமார், கள்ளக்குறிச்சி.

    First published:

    Tags: Crime News, Kallakurichi, Murder