முகப்பு /செய்தி /உலகம் / யார்க்க்ஷியர் திருக்குறள் திருவிழா..! அசத்திய சுட்டீஸ்

யார்க்க்ஷியர் திருக்குறள் திருவிழா..! அசத்திய சுட்டீஸ்

திருக்குறள் திருவிழா

திருக்குறள் திருவிழா

திருக்குறளை குழந்தைகள் ஒப்பிக்கவும், அதற்கான பொருள் விளக்கமும் சொல்லி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  • Last Updated :
  • Internationa, IndiaLondon

லண்டனில் உள்ள  யார்க்க்ஷியர் (Yorkshire) தமிழ் நண்பர்கள் குழு சார்பில் திருக்குறள் திருவிழா யார்க்க்ஷயரில் மே மாதம் 20ம் தேதி மிக விமர்சையாக நடைபெற்றது. அடுத்த தலைமுறையினருக்கு திருக்குறளை எடுத்து செல்லும் நோக்கத்துடன் தமிழ் நண்பர்கள் ஒருங்கிணைந்து இவ்விழாவினை எடுத்திருந்தனர். திருக்குறளை குழந்தைகள் ஒப்பிக்கவும், அதற்கான பொருள் விளக்கமும் சொல்லி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருக்குறள் போட்டிகளில் கலந்துக்கொண்டு  சிறப்பித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களுடன், தக்க சன்மானமும் வழங்கி ஊக்கப்படுத்தினர்.  இந்த நிகழ்ச்சியை கௌரவப்படுத்தும் விதமாக இந்தியாவிலிருந்து தமிழ் பேச்சாளர் ஜெயந்திஸ்ரீ, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை  சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழக மருத்துவர்களுக்கான முகாமும் நடத்தப்பட்டது. ஐக்கிய ராட்சய தமிழக மருத்துவ குழுவினர்களும் இணைந்து திருக்குறள் திருவிழாவிற்கு சிறப்பு செய்தனர். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த தமிழர் முதன் முறையாக லண்டனின் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட அப்பு தாமோதரன் இந்நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார்.

சுப.விரபாண்டியன்

இங்கிலாந்தில் தமிழ் பாடத்திட்ட கல்வி முறையை அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் எடுத்துச் செல்லும் கல்வியாளர் சிவாப்பிள்ளை இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். தமிழுக்கான சேவையாக தன்னார்வமாக நடத்திய இந்த திருக்குறள் திருவிழா மிகச்சிறப்பாக வருங்கால சந்ததியினரிடம் எடுத்துச் சென்றதில் பெருமிதம் கொள்வதாக யார்க்க்ஷியர் நண்பர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Tamil News, Thirukkural