முகப்பு /செய்தி /உலகம் / ரூ.123 கோடிக்கு வாங்கப்பட்ட கார் நம்பர் ப்ளேட்… எங்கு தெரியுமா?

ரூ.123 கோடிக்கு வாங்கப்பட்ட கார் நம்பர் ப்ளேட்… எங்கு தெரியுமா?

P 7 நம்பர் ப்ளேட்

P 7 நம்பர் ப்ளேட்

துபாயில் வழக்கமாக அறக்கட்டளைக்கு நிதி திரட்ட, இதுபோன்ற நம்பர் ப்ளேட் உள்ளிட்ட ஏல நிகழ்ச்சிகளை நடத்துவார்களாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரேயொரு கார் நம்பர் ப்ளேட்டின் விலை ரூ. 123 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளன. கார், பைக் போன்ற வாகனங்களுக்கு ஃபேன்ஸி நம்பர் ப்ளேட்டுகளை வாங்குவதில் பலருக்கும் ஆர்வம் இருக்கும். அந்த வகையில் விலை சற்று அதிகமாக இருந்தாலும் தனக்கு பிடித்தமான நம்பர் ப்ளேட்டை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

துபாயில் ஒரேயொரு நம்பர் ப்ளேட்டின் விலை ரூ. 123 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. அந்நாட்டு மதிப்பில் 55 மில்லியன் திர்ஹாமும், அமெரிக்க டாலர் மதிப்பில் 1.50 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலும் ஃபேன்ஸி நம்பர் ப்ளேட்டை ஒருவர் வாங்கியுள்ளார். P 7 என்ற எண்ணைக் கொண்ட நம்பர் ப்ளேட்டுதான் இந்த அளவு விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக விலை மதிப்புள்ள நம்பர் ப்ளேட்டாக இந்த P 7 அறிவிக்கப்பட்டுள்ளது. இதை யார் வாங்கினார்கள் என்ற விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.  நேற்று முன்தினம் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது. காரில் இந்த நம்பர் DUBAI P 7 என்று பொருத்தப்பட்டிருக்கும்.

top videos

    இந்த ஃபேன்ஸி நம்பர் ப்ளேட் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளிவந்துள்ளன. துபாயில் வழக்கமாக அறக்கட்டளைக்கு நிதி திரட்ட, இதுபோன்ற நம்பர் ப்ளேட்  உள்ளிட்ட ஏல நிகழ்ச்சிகளை நடத்துவார்களாம். அதில் பங்கேற்பவர்கள் தங்களது செல்வாக்கை வெளிப்படுத்தும் வகையில் அதிக விலை கொடுத்து ஃபேன்ஸி நம்பர்களை வாங்குவார்களாம். அதில்தான் ரூ. 123 கோடி மதிப்புள்ள இந்த P 7 என்ற நம்பர் ப்ளேட் வாங்கப்பட்டுள்ளது. கடந்த 2008 – இல் உள்ளூர் வர்த்தகர் சயீத் அப்துல் கபார் கவுரி என்பவர் இந்திய மதிப்பில் ரூ. 120 கோடியை கொடுத்து அபுதாபியில் 1 என்ற நம்பர் ப்ளேட்டை வாங்கியிருக்கிறார்.

    First published:

    Tags: Dubai