முகப்பு /செய்தி /உலகம் / 261 உயிர்களை பறித்த ஒடிசா ரயில் விபத்து - உலக தலைவர்கள் இரங்கல்

261 உயிர்களை பறித்த ஒடிசா ரயில் விபத்து - உலக தலைவர்கள் இரங்கல்

ஒடிசா ரயில் விபத்திற்கு உலக தலைவர்கள் இரங்கல்

ஒடிசா ரயில் விபத்திற்கு உலக தலைவர்கள் இரங்கல்

இந்த கோர விபத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிரார்கள்.

  • 2-MIN READ
  • Last Updated :
  • Odisha (Orissa), India

ஒடிசாவில் நேற்று சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகின.இந்த விபத்தில் இதுவரை சுமார் 288 பேர் உயிரிழந்துப்பதாகவும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளன. மேலும் இன்று மாலைக்குள் மீட்புப்பணிகள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட மீட்புக்குழுவினர் ஒடிசா மாநிலம் விரைந்துள்ளனர்.இந்த கோர விபத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிரார்கள். இந்நிலையில் இந்த விபத்திற்கு பல உலக தலைவர்களும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தைவான் பிரதமர் சாய்-இங் வென், இந்தியாவில் ரயில் விபத்தில் பாதிப்படைந்த அனைவருக்காகவும் வேண்டுவதாகவும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்துக்கொண்டார்.

மேலும் ஐரோப்பியா கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கெல், இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும், பாதிப்படைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடர்கள் இந்நேரத்தில் இந்தியாவுடன் இருப்பதாகவும், தங்கள் நெருக்கமானவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களையும் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங், இச்சம்பத்திற்கு இரங்கல்களை தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுடனும், அவர்களுக்கு உதவுபவர்களுடனும் அவர் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர், எரிக் கார்செட்டி தனது ட்விட்டர் பதிவில், ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக்கொண்டார்.

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்து குறித்து பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பிரதமர் மோடி விரைவில் ஒடிசா செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Odisha, Train Accident