முகப்பு /செய்தி /உலகம் / காட்டெருமைகளை அழிக்கும் மோமோஸ்... நேபாளத்தில் உருவான புது பிரச்னை!

காட்டெருமைகளை அழிக்கும் மோமோஸ்... நேபாளத்தில் உருவான புது பிரச்னை!

காட்டெருமை மோமோஸ்

காட்டெருமை மோமோஸ்

விற்பனை செய்யப்படும் இறைச்சியில் 70 சதவீதம் எருமை மாடுகளில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மோமோஸ் காதலர்களுக்கு பஞ்சமே இல்லை. அசைவ பிரியர்கள் காரசாரமான இறைச்சி துண்டுகளை மோமோஸில் ஸ்டஃப் செய்து சாப்பிடுவதை மிகவும் விரும்புகின்றனர். இந்த ருசி அவர்களை ஒவ்வொரு முறையும் சுண்டி இழுக்கிறது.

ஆனால் காட்டெருமை இறைச்சியை மோமோஸில் வைத்து பரிமாறும் நாடு ஒன்று உள்ளது உங்களுக்கு தெரியுமா? அங்குள்ள மக்களும் அதை ஆர்வத்துடன் சாப்பிட்டு வருகின்றனர். அதன் தேவையும் அதிகரித்து வருகிறது. அதனால் அப்பகுதியில் காட்டெருமைகள் அழியும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

திபெத்தை விட்டு பிரிந்த நேபாளத்துடன் மோமோஸும் வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்களின் மோமோஸ் செய்முறை மற்றும் பொருட்கள் சற்று வித்தியாசமாக இருந்தன. மோமோஸ் என்றால் - ஒரு வேகவைத்த உணவு. இது இறைச்சி மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்யப்படுகிறது. பின்னர் இந்த உணவு நேபாளம் மற்றும் அண்டை நாடான இந்தியாவிலும் பிரபலமானது. இப்போது உலகின் அனைத்து நாடுகளிலும் மக்கள் அதை சுவைத்து சாப்பிடுகின்றனர். உலகின் பல நாடுகளில் இதற்கான தேவை அதிகரித்துள்ளது.

நேபாளத்தில் மதிய உணவு நேரமாக இருந்தாலும் சரி, இரவு உணவாக இருந்தாலும் சரி, பலரின் விருப்பமான உணவு மோமோஸ் தான். ஆனால் அங்கு காட்டெருமை இறைச்சியால் செய்யப்பட்ட மோமோஸுக்கு அதிக தேவை உள்ளது. நகர்ப்புற மக்கள் இதனை விரும்பி, வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாக, நேபாளத்தின் கிழக்கு சமவெளிப் பகுதியில் ஏற்கனவே அழிந்து வரும் காட்டெருமைகளுக்கு மேலும் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. மக்கள் அவற்றைக் கொன்று விற்கத் தொடங்கியுள்ளனர், இது நிறைய பணத்தையும் பெற்று தருகிறது.

விற்பனை செய்யப்படும் இறைச்சியில் 70 சதவீதம் எருமை மாடுகளில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது. ஊடகச் செய்திகளின்படி, நேபாள வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் ஆராய்ச்சியாளர் போஜன் தாகல், "சந்தையில் விற்கப்படும் இறைச்சியில் 70 சதவிகிதம் எருமை மாடுகள் இருப்பதை நாங்கள் பார்த்தோம். தேவை அதிகமாக இருப்பதால் மக்கள் அதிக பணம் கொடுக்கக் கூட தயாராக உள்ளனர். பலர் தங்கள் எருமைகளை கோஷி தப்பு வனவிலங்கு சரணாலயத்திற்கு அனுப்பி வைத்து, அவற்றை மீண்டும் வீட்டுக்கு அழைத்து செல்ல வரும்போது, உடன் ​​காட்டெருமைகளையும் அழைத்து வருகின்றனர். அரசு ஊழியர்கள் அவர்களை தடுக்க முயன்றனர். இது காட்டுடெருமைகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது” என்றார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Momos