இங்கிலாந்து மன்னராக சார்லஸ் முடிசூட்டிக்கொள்ளும் விழாவில், ராணி கமீலா பார்க்கர் கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தைத் தவிர்ப்பது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
மன்னர் முடிசூட்டு விழா இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து, மக்களின் மனங்களையும் கவர்ந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர்மாதம் 8-ந் தேதியன்று ஸ்காட்லாந்தில் உள்ள பால் மோரல் கோட்டையில் தன் உயிரை நீத்தார்..
அதைத் தொடர்ந்து அவாது மூத்த மகனும், பட்டத்து இளவரசருமான சார்லஸ் (வயது 73), அந்த நாட்டின் மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அவர் மன்னர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதம் 6-ந்தேதி, மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா லண்டனில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் இந்த முடிசூட்டும் விழாவில் மறைந்த ராணியும், தனது மாமியாருமான இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை, ராணி கமீலா பார்க்கர் அணிவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை அவர் அணிய போவதில்லை என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த கிரீடத்துக்கு பதிலாக ராணி பேரி அணிந்திருந்த கிரீடத்தைத்தான் ராணி கமீலா பார்க்கர் அணியப்போகிறார் என உறுதியாகி இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்ற விவாதம் பரபரப்பாக நடந்து வருகிறது. பாரம்பரியமாக நாடாகும் வளாகத்தில் இருந்து கமீலா மாறுபடுவதற்கான நோக்கத்தை கேள்விக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
கோஹினூர் வைரம் இந்த கோஹினூர் வைரம், இந்தியாவின் பழைய பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தில், கோல்கொண்டா சாங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப் பட்டதாகும். இதன் எடை 105.6 கேரட் ஆகும். இந்த வைரத்தை சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் வைத்திருந்தார் என்றும், அது 1857-ம் ஆண்டு நடந்த கிளர்ச்சிக்குப் பின்னர் விக்டோரியா மகாராணிக்கு வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரத்தை இங்கு மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்ற பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. ஆனால், இந்த வைரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என இங்கிலாந்து திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இந்த நிலையில்தான் ராணி கமீலா பார்க்கர், இந்த வைரம் பதித்த கிரீடத்தை அணிவதைத் தவிர்த்துள்ளார்.
இதன் பின்னணி குறித்து பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்டுள்ள முக்கிய தகவலில், கோஹினூர் வைரம் சர்ச்சைக்குரியதாக இருக்கலாம் என்று அரண்மனை அறிந்து இருக்கிறது. எனவே முடிசூட்டும் விழாவில் ராணி கமீலா பார்க்கர் அந்தக் கிரீடத்தை அணிந்து, அது ஒரு சர்ச்சை ஆக வேண்டாம் என்று அரண்மனை வட்டாரங்கள் நினைக்கிறது.அதனால் தான் முடிசூட்டு விழாவில் கமீலா அந்த கோஹினூர் வைர கிரீடத்தை அணியப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: England, Queen Elizabeth