முகப்பு /செய்தி /உலகம் / வடகொரியா அனுப்பிய ஏவுகணையால் சிக்கல்.. ஜப்பானுக்கு எச்சரிக்கை!

வடகொரியா அனுப்பிய ஏவுகணையால் சிக்கல்.. ஜப்பானுக்கு எச்சரிக்கை!

மாதிரிப்படம்..!

மாதிரிப்படம்..!

ஏவுகணை மேற்கு ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ தீவு அருகே விழும் என கணிக்கப்பட்டதால், ஹொக்கைடோ தீவில் உள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஜப்பான் எச்சரிக்கை விடுத்தது.

  • Last Updated :
  • inter, Indiajapanjapan

வடகொரியா அனுப்பிய ஏவுகணை, ஜப்பான் எல்லைப்பகுதியில் விழும் என அறிவிக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிக தூரம் சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை, வடகொரியா அரசு கிழக்கு கடல் பகுதியில், இன்று காலை பரிசோதித்தது. இந்த ஏவுகணை மேற்கு ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ தீவு அருகே விழும் என கணிக்கப்பட்டதால், ஹொக்கைடோ தீவில் உள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஜப்பான் எச்சரிக்கை விடுத்தது.

Read More : மியான்மரில் ராணுவம் வான்வழி தாக்குதல் - குழந்தைகள் உட்பட 100 பேர் உயிரிழப்பு

மேலும், போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்காததால், ஜப்பான் அரசு ஹொக்கைடோவுக்கு விடுத்த எச்சரிக்கையை திரும்பப் பெற்றது. ஏவுகணை ஹொக்கைடோவை தாக்கவில்லை என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் தெரிவித்தார். எனினும், அறிவிப்பு திரும்ப பெறப்படும் வரை மக்கள் பீதியின் உச்சியில் இருந்தனர்.

இதற்கிடையே, கடல் பகுதியில் ஏவுகணை விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில், அமெரிக்காவும்- தென் கொரியாவும் மேற்கொண்ட கூட்டு ராணுவ பயிற்சிக்கு பதிலடியாக இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Japan, North korea