முகப்பு /செய்தி /உலகம் / பெண்ணின் இதயத்தை வெட்டி குடும்பத்தினருக்கு சமைத்துக் கொடுத்த நபர்... அமெரிக்காவில் அரங்கேறிய கொடூரம்..

பெண்ணின் இதயத்தை வெட்டி குடும்பத்தினருக்கு சமைத்துக் கொடுத்த நபர்... அமெரிக்காவில் அரங்கேறிய கொடூரம்..

இதயம்

இதயம்

பெண்ணின் இதயத்தை உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைத்து தனது மாமா அத்தைக்கு பரிமாறியுள்ளார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • chennai |

பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்து சமைத்த அமெரிக்க நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

44 வயதான லாரன்ஸ் பால் ஆண்டர்சன் என்பவர்  2021 இல் போதைப்பொருள் வழக்கில் சிக்கி அதற்காக 20 வருடங்கள் சிறை தண்டனையை பெற்றுள்ளார். தண்டனை காலத்தில் வெறும் 3 ஆண்டுகள் கழிந்த நிலையில் ஓக்லஹோமாவின் கவர்னர் கெவின் ஸ்டிட் அவருக்கு  முன்கூட்டியே விடுவிக்க ஆணை பிறப்பித்துள்ளார். 

சிறையில் இருந்து வெளியே வந்த ஆண்டர்சன் 41 வயதான ஆண்ட்ரியா லின் பிளாங்கன்ஷிப்பின் வீட்டிற்குள் நுழைந்து, அவரைக் கத்தியால் குத்தி கொன்றுள்ளார். அதுமட்டும் இல்லாமல் அவரது இதயத்தை மட்டும் தனியாக வெட்டி, கையில் எடுத்துக்கொண்டு அவரது அத்தை மாமாவான லியோன் பை மற்றும் டெல்சி பை ஆகியோரின் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

பின்னர் அந்த பெண்ணின் இதயத்தை உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைத்து தனது மாமா, அத்தைக்கு பரிமாறியுள்ளார். அதன் பின்னர் அவரது மாமாவான 67 வயதான லியோன் பை  மற்றும் அவரது 4 வயது பேத்தி கேயோஸ் யேட்ஸ் ஆகியோரைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

ஆண்ட்ரியா பிளாங்கன்ஷிப், ஆண்டர்சன்

அது மட்டும் இன்றி அவரது அத்தை டெல்சி பையை தாக்கி காயப்படுத்தியுள்ளார். இது குறித்து புதன்கிழமை கிரேடி கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமையன்று மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் தாக்குதல் முயற்சி குற்றங்களை ஒப்புக்கொண்டு சரண் அடைந்தார். அவரது குற்றங்களுக்கு ஐந்து தொடர்ச்சியான ஆயுள் தண்டனைகளைப் பெற்றார்.

பின்னர் விசரணையின் போது கொஞ்ச நாள் முன்னர்  அவர் விடுவிக்கப்பட்ட ஆணை தவறானது என்பது தெரிய வந்துள்ளது. தண்டனை குறைப்பு, சிறை மாற்ற விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது தவறுதலாக ஆண்டர்சன் பெயர் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டது தெரியவந்துள்ளது.

First published:

Tags: Murder, Prisoner