விஞ்ஞானத்தின் அனைத்து துறையிலும் நம் மனித சமூகம் நிறைய முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. குறிப்பாக மருத்துவ அறிவியலில் நாம் கண்டு வரும் வளர்ச்சி அபரிவிதமாக இருக்கிறது. இதனை நிரூபிக்கும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு ஒன்று இன்னும் பிறக்காத, கருப்பைக்குள் வளரும் குழந்தை ஒன்றுக்கு மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.
கருவிலிருந்த குறிப்பிட்ட குழந்தைக்கு Venus of Galen malformation என்ற சிக்கல் கண்டறியப்பட்டது. இந்தநிலை காரணமாக மூளையில் நரம்பு தொடர்பான பிரச்னை ஏற்பட்டு இதன் காரணமாகக் குழந்தை பிறந்த உடனேயே மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் வாய்ப்பு இருந்தது. மூளையிலிருந்து இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளம் சரியாக வளர்ச்சியடையாத போது இந்த சிக்கல் ஏற்படுகிறது.
எனவே பிறக்காத குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அரிய மூளை அறுவை சிகிச்சை அமெரிக்க மருத்துவ நிபுணர்களால் சில வாரங்களுக்கு முன் செய்யப்பட்டது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரில் இந்த ஆச்சரியமான அறுவை சிகிச்சை நடந்தது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கருவிலிருந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வது மிகவும் முக்கியம், இல்லையெனில் குழந்தை பிறந்த உடனேயே இறப்பது உறுதி எனச் சூழல் இருந்தது.
மூளையில் இருந்து இதயத்திற்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்த நாளம் சரியாக வளர்ச்சியடையாத போது ஏற்படும் இந்த நிலையால், ரத்தத்தின் அதிக அளவு நரம்புகள் மற்றும் இதயத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்து சிக்கலை ஏற்படுத்தும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையே பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனையின் கதிரியக்க நிபுணனரான டாக்டர் டேரன் ஆர்பாக் பேசுகையில், கருவிலிருந்த குழந்தைக்குக் கண்டறியப்பட்ட சிக்கல் காரணமாக, கடுமையான மூளை காயங்கள் மற்றும் பிறப்புக்குப் பிறகு உடனடி இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் இருந்தது என்றார்.
பொதுவாக, குழந்தைகள் பிறந்த பிறகு ரத்த ஓட்டத்தை மெதுவாக்கச் சிறிய சுருள்களைச் செருகுவதற்கு ஒரு Catheter-ஐ பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருப்பினும், சிகிச்சை பெரும்பாலும் தாமதமாக நிகழ்கிறது எனக் கூறினார். கவனிப்பில் முன்னேற்றங்கள் இருந்தாலும், இந்த நிலையில் உள்ள குழந்தைகளில் 50 - 60% வரை உடனடியாக மிகவும் நோய்வாய்ப்படும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் பாதிக்கப்படுவதில் 40% குழந்தைகள் இறக்க நேரிடுகிறது. அப்படியே உயிர் பிழைத்தாலும் அந்த குழந்தைகளில் பாதி பேர் கடும் நரம்பியல் மற்றும் அறிவாற்றல் பிரச்னைகளை எதிர்கொள்வதாக என்று ஆர்பாக் டேரன் ஆர்பாக் குறிப்பிட்டுள்ளார்.
10 டாக்டர்கள் கொண்ட குழு :
34 வாரக் கர்ப்பிணியின் கருவிலிருந்த குழந்தைக்குச் செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையில் 10 மருத்துவர்கள் ஈடுபட்டனர். மருத்துவர்கள் நீண்ட ஊசியை அல்ட்ராசோனோகிராபி மூலம் தாயின் வயிற்றில் செலுத்தி பின் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தனர். தற்போது அந்த குழந்தை பிறந்து நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த குழந்தைக்கு Denver எனப் பெயரிடப்பட்டுள்ளது. வழக்கமான அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மூலம், Denver-ன் மூளைக்குள் இந்த அரிய ரத்த நாள சிக்கல் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். கருவிலேயே இந்த பாதிப்பைச் சந்திக்கும் பெரும்பாலான குழந்தைகள் உயிர் பிழைப்பதில்லை என்ற நிலையில் கருவிலிருந்து டென்வருக்கு ஏற்பட்டிருந்த அபாயம் பெரிதாகிக் கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்தே பிறக்காத குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர்.
Also Read : துபாய் இவ்ளோ சுத்தமா.. வெள்ளை சாக்ஸ் சாட்சியாக காட்டும் பெண் டிக்டாக்கர்.. வைரல் வீடியோ
vein of Galen malformation என்றால் என்ன?
VOGM என்பது மூளைக்குள் இருக்கும் ஒரு வகை அரிதான ரத்த நாள அசாதாரண நிலையாகும். இந்த கண்டிஷனில் மூளையில் உள்ள Misshapen arteries ரத்த ஓட்டத்தை மெதுவாக்க உதவும் நுண்குழாய்களுடன் இணைவதற்குப் பதில், நேரடியாக நரம்புகளுடன் இணைகின்றன. இது நரம்புகளுக்குள் உயர் அழுத்த ரத்த ஓட்டம் நிகழக் காரணமாகிறது. நரம்புகளில் ஏற்படும் இந்த கூடுதல் அழுத்தம் உடலில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.