முகப்பு /செய்தி /உலகம் / இந்திய பெருங்கடல் நீருக்கடியில் அழகான நீர்வீழ்ச்சி... எங்கு உள்ளது தெரியுமா?

இந்திய பெருங்கடல் நீருக்கடியில் அழகான நீர்வீழ்ச்சி... எங்கு உள்ளது தெரியுமா?

நீருக்கடியில் நீர்வீழ்ச்சி

நீருக்கடியில் நீர்வீழ்ச்சி

நீருக்கடியில் இருக்கும் இந்த நீர்வீழ்ச்சியைப் பார்க்க உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வருகிறார்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகில் பல அழகிய நீர்வீழ்ச்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங்கள் விருப்பமான நீர்வீழ்ச்சிக்கு படையெடுக்கிறார்கள். ஆனால், தண்ணீருக்குள் இருக்கும் ஒரு அருவி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படிப்பட்ட ஒரு நீர்வீழ்ச்சியின் கதையைத்தான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறோம். இந்தியப் பெருங்கடலில் இருக்கும் இந்த நீர்வீழ்ச்சி மக்களைக் கவர்ந்து வருகிறது.

இந்த தனித்துவமான நீர்வீழ்ச்சி இந்தியப் பெருங்கடலில் மொரிஷியஸின் தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இங்கே தண்ணீர் நடுவில் அலைகளை வெட்டி கீழே மூழ்குகிறது. அது எங்கு பாய்கிறது என்று தெரியவில்லை, அதன் தகவல் இன்னும் கிடைக்கவில்லை. மணல் மற்றும் வண்டல் படிவதால் அங்கு ஒரு வியத்தகு காட்சி உருவாகி, கடல் நீர் உள்ளே நுழைவதாகக் கூறப்படுகிறது.

நிபுணர்களின் கூற்றுப்படி, இது ஒரு நீர்வீழ்ச்சியாக மக்களிடையே பிரபலமாக இருக்கலாம். ஆனால் உண்மையில் அது அப்படி இல்லை, இது ஒரு ஒளியியல் மாயை. மணல் மற்றும் வண்டல் படிவத்தால், நீரின் நிறம் ஏற்ற இறக்கமாக இருப்பதால், அருவி போல் காட்சியளிக்கிறது அல்லது தண்ணீர் இழுத்துச் செல்வது போல் தெரிகிறது. நீருக்கடியில் இருக்கும் இந்த நீர்வீழ்ச்சியைப் பார்க்க உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வருகிறார்கள். முழுக்க முழுக்க வெள்ளை மணலால் நிரம்பியிருக்கும் இந்த கடற்கரையின் அழகையும் கண்டு மகிழ்கிறார்கள்.

இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டது. மொரீஷியஸ் அருகே இந்தியப் பெருங்கடலில் உள்ள நீர்வீழ்ச்சியைக் கரையிலிருந்து பார்க்க முடியாது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 500 மீட்டர் உயரமுள்ள Le Morne Braban சிகரத்திலிருந்து கூட ஒரு சிறிய பகுதி மட்டுமே தெரியும். அதையெல்லாம் பார்க்க, பறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த வீடியோ இதுவரை 4.18 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Water