முகப்பு /செய்தி /உலகம் / Russia-Ukraine war: பக்முத் நகரின் மீது பாஸ்பரஸ் குண்டுகள் வீச்சு... ரஷ்யா மீது உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டு

Russia-Ukraine war: பக்முத் நகரின் மீது பாஸ்பரஸ் குண்டுகள் வீச்சு... ரஷ்யா மீது உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டு

பாஸ்பரஸ் குண்டுகள் வீச்சு

பாஸ்பரஸ் குண்டுகள் வீச்சு

கிழக்கு உக்ரைன் நகரமான பக்முத் மீது மிகவும் கொடிய பாஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா மீது உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. அதற்கான வீடியோவையும் உக்ரைன் வெளியிட்டுள்ளது.

  • Last Updated :
  • internat, Indiaukraineukraine

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே ஒரு ஆண்டை தாண்டியும் நடைபெற்று வரும் போர் இப்போது மேலும் உக்கிரமடைந்துள்ளது.

உக்ரனைின் பல்வேறு நகரங்கள் ரஷ்யாவின் தாக்குதலால் உருக்குலைந்து போயுள்ளன. ஆனாலும் உக்ரைன் பின்வாங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தக்கூடும் என உலக நாடுகள் அஞ்சிக் கொண்டிருந்த நிலையில் ரஷ்யா வேறு விதமான தாக்குதலை அரங்கேற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யா உக்ரைனில் உள்ள பக்முத் நகரின் மீது பாஸ்பரஸ் குண்டை வீசியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. அது தொடர்பான வீடியோவையும் உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது. உக்ரேனிய இராணுவத்தால் வெளியிடப்பட்ட ட்ரோன் காட்சிகளில் பக்முத் நகரம் பற்றி எரிவதைக் காண முடிகிறது. அந்த காணொளியில் நகரில் வெள்ளை பாஸ்பரஸ் மழை பொழிவது போல் தெரிகிறது.

பாஸ்பரஸ் குண்டு எவ்வளவு ஆபத்து?

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவது போர்க் குற்றமாகக் கருதப்படுகிறது. பாஸ்பரஸ் குண்டு, வெட்டவெளியில் விழுந்தால், அது நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் சுற்றளவுக்கு பரவும். இந்த குண்டுகள் தீர்ந்து போகும் வரை அல்லது அந்த இடத்தில் ஆக்ஸிஜன் முழுமையாக தீர்ந்து போகாத வரை எரிந்து கொண்டே இருக்கும். அவை வேகமாக பரவி ஆகிசிஜனோடு கலந்து அதிக உஷ்ணமுள்ள தீயை உருவாக்கும். அதை அணைப்பது மிகவும் கடினம். இதற்கு முன்பும் கூட, ரஷ்யா பாஸ்பரஸ் குண்டுகளை உக்ரைன் மீது பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனாலும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் இப்போது உக்ரைன் வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளது.

பல மாதங்களாக பாக்முத் நகரை கைப்பற்ற ரஷ்யா முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் இறந்ததாகதவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த ஆத்திரத்தில் ரஷ்ய பாஸ்பரஸ் தாக்குதலில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பக்முத் நகரில்  பொதுமக்கள் வசிக்காத பகுதிகளில் இந்தக் கொடிய பாஸ்பரஸ் தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளதாக  உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. இந்த தாக்குதல் எப்போது நடந்தது என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. உக்ரைன் பகிர்ந்துள்ள வீடியோவில், ரஷ்யாவின் இந்த பாஸ்பரஸ் வெடிகுண்டு தாக்குதலால் பாக்முத் நகரின் உயரமான கட்டிடங்கள் நெருப்பு பந்தாக மாறியதாக கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பிற வீடியோக்கள் தரையில் தீப்பிழம்புகள் எரிவது போலவும், இரவு நேரங்களில் வானத்தில் வெள்ளை மேகங்களைப் பொல் பாஸ்பரஸ் பொழிவது போலவும் உள்ளது.

இருப்பினும், பாஸ்பரஸ் ஆயுதங்களை பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை ரஷ்யா ஒப்புக்கொள்ளவில்லை. முந்தைய காலங்களிலும் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்தே வந்தது. கடந்த ஆண்டு கிரெம்ளின் மாளிகை பத்திரிகை செயலாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ரஷ்யா சர்வதேச மரபுகளை ஒருபோதும் மீறியதில்லை என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க : சாக்கடைக்குள் கட்டுக்கட்டாக கிடந்த ரூபாய் நோட்டுகள்.. துள்ளி குதித்து அள்ளி செல்லும் மக்கள்! - வைரல் வீடியோ

top videos

    வெள்ளை பாஸ்பரஸ் என்பது ஒரு மெழுகுப் பொருளாகும். இது ஆக்ஸிஜனுடன் சேரும்பொது பற்றி எரிகிறது. இதன் காரணமாக, பிரகாசமான புகையுடன் தீப்பிழம்பு உருவாகிறது. பாஸ்பரஸ் எரியும் போது வெப்பநிலை 800 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. பாஸ்பரஸ் வெடிகுண்டு வீசப்பட்ட இடத்திலிருந்து பல நூறு கிலோமீட்டர் சுற்றளவு வரை பரவுகிறது. வெடிகுண்டு வீசப்பட்ட பிறகு பாஸ்பரஸ் தீரும் வரை தீ எரியும். அல்லது அங்கு இருக்கும் ஆக்ஸிஜன் தீரும் வரை எரியும். இதனால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும்

    First published:

    Tags: Russia - Ukraine, War