உக்ரைனின் பாதுகாப்புத்துறை அமைச்சம் வெளியிட்ட காளி குறித்த சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவிற்காக, அந்நாட்டு வெளியுறவுத் துறை வருத்தம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் குண்டு வெடிப்பு குறித்து சித்தரிக்கப்பட்ட படம் ஒன்றை வெளியிட்டது. அதில், குண்டு வெடித்து வரும் புகையில், இந்து கடவுளான காளியின் உருவம் இருக்கும் வகையில் சித்தரிக்கப்பட்டிருந்தது. இதற்கு, இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சமூக வலைதளங்களில் உக்ரைனுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையும் படிக்க : 16 வயது சிறுமியை திருமணம் செய்த 65 வயது மேயர்... மாமியாருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா?
இந்நிலையில், உக்ரைன் பாதுகாப்புத்துறையின் முதன்மை துணை அமைச்சரான எமின் ஜெப்பர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்து கடவுளான காளியை தவறாக சித்தரித்ததற்கு வருந்துவதாக தெரிவித்துள்ளார்.
We regret @DefenceU depicting #Hindu goddess #Kali in distorted manner. #Ukraine &its people respect unique #Indian culture&highly appreciate🇮🇳support.The depiction has already been removed.🇺🇦is determined to further increase cooperation in spirit of mutual respect&💪friendship.
— Emine Dzheppar (@EmineDzheppar) May 1, 2023
இந்தியாவின் தனித்துவமான கலாசாரத்தை உக்ரைன் மதிக்கிறது எனவும், சர்ச்சைக்குரிய ட்வீட் ஏற்கெனவே நீக்கப்பட்டுவிட்டது எனவும் விளக்கமளித்துள்ளார். உக்ரைன் - இந்தியா இடையேயான நட்பை மேலும் வலுப்படுத்தவே உக்ரைன் விரும்புவதாகவும் எமின் ஜெப்பர் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.