முகப்பு /செய்தி /உலகம் / இந்துக்கள் அனைவருமே செல்வந்தர்கள், நன்கு படித்தவர்களாம்… ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்..!

இந்துக்கள் அனைவருமே செல்வந்தர்கள், நன்கு படித்தவர்களாம்… ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்..!

காட்சிப் படம்

காட்சிப் படம்

இங்கிலாந்தில் இருக்கும் இந்துக்களில் பெரும்பாலானவர்கள் நன்கு படித்த, பணக்காரர்களாக இருப்பதாக சர்வே முடிவு ஒன்றின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu |

இப்போதெல்லாம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் இந்தியர்களின் முக்கியத்துவம்  அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டார்கள் இந்தியர்கள்.

ஒரு காலத்தில் நம்மை ஆண்ட இங்கிலாந்து நாட்டின் பிரதமராக  ரிஷி சுனக் என்கிற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியர்கள் கோலோச்சி வருவதால் அவர்களை வெளிநாடுகள் இருக்கரம் கூப்பி வரவேற்கத்தான் செய்கின்றன. இதனால் வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் இந்துக்களின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தொகை கணக்கீட்டு தகவல்களில் இருந்து சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தில் 2021 மார்ச் மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் கிடைக்கப்பெற்ற விபரங்கள் அடிப்படையில், சமீபத்தில் Religion by housing, health, employment and education என்ற ஆய்வறிக்கையை  அந்நாட்டு தேசிய புள்ளியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன் மூலம் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் வாசிக்க: சிறுநீரை சுத்திகரித்து குடிநீர்.. விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ளும் உணவு பிரச்னை.. சுவாரஸ்யமான தகவல்கள்..!

பல நூற்றாண்டுகளில் முதல் முறையாகப் இங்கிலாந்து நாட்டில் கிறிஸ்துவர்களின் மக்கள் தொகை 50% கீழ் குறைந்துள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 2011இல் இங்கிலாந்து மக்கள் தொகையில் 59.3% பேர் கிறிஸ்தவர்கள் இருந்த நிலையில், இப்போது அது 46.2%ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்தில் கிறிஸ்தவ மக்கள்தொகை குறைவது தெரிகிறது. இது போல இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை மூலம் வெளியாகியுள்ளது.

அதன்படி, சமீபத்திய கணக்கெடுப்பின்படி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வசிக்கும் மக்களில் மதங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது, அங்கே இந்துக்கள் செல்வாக்காக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல அங்கே வசிக்கும் பெரும்பாலான சீக்கியர்கள் தங்களுக்குச் சொந்தமான வீடுகளை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் கூறுகையில் இந்தக் கணக்கெடுப்பின் போது இந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டவர்களில் 87% பேர் தாங்கள் பொருளாதார ரீதியாக ​​மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாகப் இங்கிலாந்தில் 82% பேர் நல்ல நிலையில் உள்ளதாகத் தெரிவித்த நிலையில், அதைவிட அங்கு வசிக்கும் இந்துக்களின் பொருளாதாரம் மேம்பட்ட நிலையில் இருக்கிறது.

top videos

    அதேபோல இங்கிலாந்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது, ​​இந்துக்களில் 54.8% பேர் லெவல் 4 அல்லது அதற்கு மேலான கல்வித் தகுதியைப் பெற்றுள்ளனர். அதேபோல அங்கு வசிக்கும் சீக்கியர்கள் பெரும்பாலானோர் அதாவது 77.7% தங்கள் சொந்த வீடுகளில் தான் வசிக்கிறார்களாம். இங்கிலாந்தில் கடந்த 2011இல் 1.5% இந்துக்கள் இருந்த நிலையில், இப்போது அது 1.7ஆக அதிகரித்துள்ளது. அதாவது 10 லட்சத்திற்கும் சற்று அதிகமான இந்துக்கள் இங்கிலாந்தில் உள்ளனர். அங்கு மூன்றாவது அதிகம் பின்பற்றப்படும் மதமாக இந்து மதம் உள்ளது. அடுத்து அங்கு சுமார் 5 லட்சம் பேர் சீக்கிய மதத்தையும், 2.72 லட்சம் பேர் பவுத்த மதத்தையும் 2.71 லட்சம் பேர் யூதர்களாகவும் உள்ளனர். மற்ற மதங்களைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 3.48 லட்சமாக உள்ளது.

    First published:

    Tags: Hindu, Population