முகப்பு /செய்தி /உலகம் / இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா...!

இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா...!

இங்கிலாந்து துணை பிரதமர் ராஜினாமா

இங்கிலாந்து துணை பிரதமர் ராஜினாமா

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அமைச்சரவை முன்னாள் ஊழியர்களை மிரட்டியதாக இங்கிலாந்து துணை பிரதமர் மீது புகார் எழுந்தது.

  • Last Updated :
  • inter, IndiaUnited kingdom

இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் ராப் தன் மீதான குற்றச்சாட்டிற்கு பொறுப்பேற்று பதவி விலகினார்.

இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் ஆட்சியின் போது, டொமினிக் ராப் துணை பிரதமராக பதவி வகித்தார். இதனை தொடர்ந்து ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்ற பிறகும், டொமினிக் துணை பிரதமராக நீடித்தார். மேலும் சட்டத்துறை அமைச்சர் பொறுப்பும் டொமினிக்கிற்கு கூடுதலாக வழங்கப்பட்டது. இந்நிலையில், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அமைச்சரவை முன்னாள் ஊழியர்களை டொமினிக் மிரட்டியதாக புகார் எழுந்தது.

இதையும் படிங்க; மனைவியால் மீண்டும் சிக்கலில் சிக்கிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்…!

top videos

    இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்ட போதே, குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் தான் பதவி விலகுவதாக டொமினிக் அறிவித்திருந்தார். அதற்கு ஏற்ப, அவர் மீதான குற்றச்சாட்டு விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து டொம்னிக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

    First published:

    Tags: England, Rishi Sunak