முகப்பு /செய்தி /உலகம் / சம்பளம் தரவில்லை... அமைச்சரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பாதுகாவலர்...!

சம்பளம் தரவில்லை... அமைச்சரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பாதுகாவலர்...!

உகாண்டா அமைச்சர் படுகொலை

உகாண்டா அமைச்சர் படுகொலை

சம்பளம் தராததால் அமைச்சரை அவரின் பாதுகாவலரே சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

  • Last Updated :
  • international, Indiaugandaugandaugandauganda

உகாண்டாவின் கியான்ஜா (KYANJA) பகுதியில் சம்பளம் தராததால் அமைச்சர் Charles Engolaவை அவரின் பாதுகாவலரே சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உதவியாளருக்கு நீண்ட காலமாக ஊதியம் தராமல் அமைச்சர் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட ஒரு பாதுகாவலர் அதிருப்தியில் இருந்துள்ளார். அமைச்சர் வீட்டில் இருந்தபோது அவரிடம் சம்பளம் குறித்து பாதுகாவலர் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாதுகாவலர் அமைச்சரை சுட்டுக்கொன்றார்.

இதையும் வாசிக்கசர்ச்சையான காளியின் ட்வீட்.. மன்னிப்பு கோரியது உக்ரைன் பாதுகப்புத்துறை அமைச்சகம்..

இந்த சம்பவத்தில், தாக்குதல் நடத்திய நபரின் அடையாளங்கள் உடனடியாக வெளியாகவில்லை. கடந்த 2021ஆம் ஆண்டும் இதே பாணியில் பாதுகாவலர் ஒருவர் சுட்டதில், கம்பாலா பகுதியில் அரசுத்துறை அதிகாரி ஒருவரின் மகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Murder, Uganda