முகப்பு /செய்தி /உலகம் / கிரிமினல் குற்றம்.. சிறை தண்டனை - தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிராக புது சட்டம் கொண்டு வந்த உகாண்டா!

கிரிமினல் குற்றம்.. சிறை தண்டனை - தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிராக புது சட்டம் கொண்டு வந்த உகாண்டா!

உகாண்டா

உகாண்டா

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை உகாண்டா நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

  • Last Updated :
  • inter, IndiaKampalaKampala

தன்பாலின ஈர்ப்பாளர்கள் LGBTQ+ சமூகத்திற்கு சில நாடுகள் சட்ட அங்கீகாரம் தந்த போதிலும், பல நாடுகளில் இன்னும் இது சட்டவிரோதமாகத் தான் பார்க்கப்படுகிறது. சில நாடுகளில் இவர்களுக்கு எதிரான கடுமையான தண்டனைகளுடன் கூடிய சட்டங்களும் அமலில் உள்ளன. அப்படித்தான், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் ஒன்றை உகாண்டா நாட்டு நிறைவேற்றியுள்ளது.

கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஆப்ரிக்க நாடுகளில் தன்பாலின சேர்க்கை சட்ட விரோதமாகும். இந்நிலையில், சமீப நாள்களாக தன்பாலின ஈர்ப்பை கிரிமினல் குற்றமாக அறிவித்து கடுமையான தண்டனையை விதிக்க வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.

தன்பாலின ஈர்ப்பு என்பது ஆப்ரிக்காவின் பாரம்பரிய மத நம்பிக்கைகளுக்கு எதிரானவை, தங்கள் சமூகத்திற்கு தீங்கானவை என உகாண்டா அரசு கூறி வந்தது. இதைத் தொடர்ந்து உகாண்டா நாடாளுமன்றத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிரான மசோதாவை அந்நாட்டின் எதிர்க்கட்சி உறுப்பினர் அசுமான் பசலிர்லா அறிமுகம் செய்தார்.

அதைத் தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களின் முழு ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ஜனாதிபதி யோவேரி முசெவேனியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி யோவேரி தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை கூறிவருபவர். இந்த விவகாரத்தில் மேற்கு நாடுகள் உகாண்டா மீது தேவையில்லாத அழுத்தம் தருவதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பெற்றோரால் பிரிந்த காதல் ஜோடி... 60 ஆண்டுகளுக்கு பிறகு பேரக்குழந்தைகள் முன்பு நடந்த திருமணம்!

top videos

    இந்த புதிய சட்டத்தின் படி யாரேனும் தன்னை தன்பாலின ஈர்ப்பாளர், LGBTQ+ சமூகத்தை சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்திக் கொண்டால் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும். மேலும், இத்துடன் தன்பாலின ஈர்ப்பு தொடர்பாக கூடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது உறுதியானால் அதிகபட்சமாக மரண தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என சட்டம் தெரிவிக்கிறது. தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிராக உலகிலேயே மிக கடுமையான சட்டங்களில் ஒன்றாக இது பார்க்கப்படும் நிலையில், இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    First published:

    Tags: Homosex, LGBT, Uganda