வெற்றிக்கொடிகட்டு திரைப்படத்தில் துபாயில் வேலை பார்த்தாக கூறி வடிவேலு நடித்த கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. அதில் ஒரு காட்சியில் துபாயில் இருக்கும் சாலைகளின் தரம் மற்றும் சுத்தத்தை கூறும் அவர், துபாய் ரோடுலாம் கண்ணாடி மாதிரி இருக்கும். அதுல சாப்பாடு கூட போட்டு சாப்பிடலாம் அவ்வளவு சுத்தம் என்று கூறுவார். வடிவேலு பேசிய காமெடியை நிஜமாக்குவது போன்ற ஒரு வினோத செயலை ஒரு பிரபல டிக்டாக்கர் செய்து காட்டியுள்ளார்.
அவர் துபாய் சாலைகள் எவ்வளவு சுத்தமானவை என்பதை அனைவருக்கும் காட்டுவதற்கு வித்தியாசமான முயற்சியை செய்துகாட்டியுள்ளார். பொதுவாக நாம் கால்களில் சாக்ஸ் போட்டு அதன் மேல் ஷூ போட்டுக்கொண்டு பயணிப்போம். அதும் வெள்ளை நிற சாக்ஸ் என்றால் அதில் அதிகம் அழுக்கு படிந்துவிடுமே, துவைப்பதற்கு சிரமம் என்று கவலை கொள்வோம்.
ஆனால் எலோனா என்ற அந்த பெண் டிக்டாக்கர் துபாய் சாலைகளின் தூய்மையை காட்டுவதற்காக, கால்களில் ஷூக்கள் அணியாமல் வெறும் வெள்ளை நிற சாக்ஸ்களை அணிந்து கொண்டு சாலைகளில் வலம் வந்துள்ளார். சாலையில் நடந்து சென்று வந்தப்பின் தனது கால் சாக்ஸ்களை தூக்கி காட்டுகிறார் எலோனா.
Dubai is the cleanest city in the world ✨🇦🇪
pic.twitter.com/iQCdm9TvEN
— حسن سجواني 🇦🇪 Hassan Sajwani (@HSajwanization) May 11, 2023
அவை மீது தூசியோ, அழுக்கோ படியாமல் வெள்ளை நிறத்திலேயே இருப்பது வீடியோவில் தெரிகிறது. இந்த வீடியோ இணையத்தில் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வேகமாக பகிரப்படுகிறது. பலரும் துபாய் அரசு நிர்வாகம் மற்றும் மக்களின் செயல்பாட்டை வெகுவாக பாராட்டி கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓரே ஆண்டில் 7.1 கோடி மக்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறிய அவலம்... காரணம் இதுதான்..!
உலகின் மிக தூய்மையான நகரம் என்ற பெருமையை தொடர்ந்து மூன்றாவது முறையாக துபாய் பெற்றுள்ளது. துபாய்க்கு கிடைத்த அங்கீகாரம் தொடர்பாக ட்வீட் மூலம் கருத்து தெரிவித்துள் செய்த ஷேக் முகமது, தூய்மை என்பது துபாய் மக்களின் பண்பாடு, கலாசாரம் மற்றும் நம்பிக்கையின் முக்கிய அங்கம் என்றும், நகரின் பாதுகாப்பு மற்றும் தூய்மையை உறுதிபடுத்த அரசு நிர்வாகம் உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.