லண்டனில் இன்று நடைபெறும் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் இந்திய பிரபலங்கள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் மற்றும் நடிகை சோனம் கபூர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் விழாவில், எலிசபெத் ராணி மறைவுக்கு பின்பு 70 ஆண்டுகள் கழித்து நடைபெறும் சார்லஸ் மன்னராக முடிசூடும் விழாவிற்கு, இங்கிலாந்து அரச குடும்பத்தைத் தவிர்த்து 203 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பிரதிநிதிகள், சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
அந்த பட்டியலில் இந்தியவைச் சேர்ந்த சில முக்கிய நபர்களும், அதிகாரிகளும் உள்ளனர். அந்த பட்டியலைத்தான் இப்போது பார்க்க இருக்கிறோம். அதிகாரப்பூர்வமாக இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், நேற்று தனது மனைவி சுதேஷ் தன்கருடன் லண்டன் சென்றடைந்தார்.
அதோடு முடிசூட்டு விழா முடிந்த பின்னர் நடக்கும் கலை நிகழ்ச்சிகளின் அங்கமாக காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சியை ஹிந்தி நடிகையும், அணில் கபூரின் மகளுமான சோனம் கபூர் தொடங்கி வைக்கிறார்.
இவர்கள் தவிர, மும்பையில் இருந்து இரண்டு சகோதரர்கள் முடிசூட்டு விழாவில் தங்கள் சகோதரத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்று செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது. முடிசூட்டு விழாவில், மன்னருக்கு பரிசளிக்க புனேரி தலைப்பாகை மற்றும் வார்காரி சமூகத்தால் தயாரிக்கப்பட்ட சால்வையை அவர்கள் வாங்கியுள்ளனர்.
இந்த சகோதரர்கள் முடிசூட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டதற்கு ஒரு சுவாரஸ்ய கதை இருக்கிறது. சார்லஸ் 2003 இல் தனது இந்திய வருகையின் போது மும்பையின் புகழ்பெற்ற லஞ்ச்பாக்ஸ் டெலிவரி செய்பவர்களைச் (dabbawalas) சந்தித்தார். அந்த நட்பின் காரணமாக தான் முடிசூட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர், கமிலா பார்க்கர் பவுல்ஸுடனான சார்லஸின் திருமணத்திற்கும் இவர்கள் அழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த முடிசூட்டு விழாவிற்கு அரசரின் தொண்டு முயற்சிகளுடன் தொடர்புடைய பல இந்திய சமூகப் பணியாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு பெர்சனல் ஆலோசகர் மற்றும் சமையல்காரர் உள்ளனர்.
சார்லஸின் அறக்கட்டளையின் கட்டிடக் கைவினைத் திட்டம் மற்றும் பிரின்ஸ் அறக்கட்டளை பாரம்பரிய கலைப் பள்ளி ஆகியவற்றில் பட்டம் பெற்ற புனேவில் பிறந்த 37 வயதான கட்டிடக் கலைஞரான சௌரப் பாட்கேவும் விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதையும் பாருங்க: மூன்றாம் சார்லஸுக்கு இன்று முடிசூட்டு விழா : விழாக்கோலம் பூண்ட லண்டன் நகரம்!
கடந்த ஆண்டு பிரின்ஸ் டிரஸ்ட் குளோபல் விருது பெற்ற 33 வயதான குல்ஃப்ஷாவும் இந்தப் பட்டியலில் உள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனையின் படி, டெல்லியைச் சேர்ந்த அவர் இப்போது ஒரு ஆலோசனை நிறுவனத்தில் பணிபுரிகிறார், கட்டுமானத் திட்டங்களுக்கான விலை மதிப்பீடுகளை வழங்கி வருகிறார்.
கனடாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான ஜெய் படேலும் கடந்த மே மாதம் பிரின்ஸ் டிரஸ்ட் கனடாவின் இளைஞர் வேலைவாய்ப்புத் திட்டத்தை நிறைவு செய்ததற்காக விருந்தினர் பட்டியலில் உள்ளார். அவர் டொராண்டோவில் உள்ள சிஎன் டவரில் சமையல்காரர் வேலை செய்து வருவதாக அரண்மனை அறிக்கை தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதம மந்திரி ரிஷி சுனக், முடிசூட்டு விழாவில் பைபிள் புத்தகமான கொலோசியஸ் புத்தகத்திலிருந்து பாட உள்ளார். அவரும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் கொடியேந்தி ஊர்வலத்தை வழிநடத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அவரது மற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சகாக்கள் விழாவில் வெவ்வேறு மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். லார்ட் இந்திரஜித் சிங் சீக்கிய மதத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார் மற்றும் இந்தோ-கயானீஸ் பாரம்பரியத்தின் இறைவன் சையத் கமால் முஸ்லீம் மதத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: England, Queen Elizabeth