முகப்பு /செய்தி /உலகம் / ரமலான் பண்டிகையை கொண்டாட பெண்களுக்கு தடைவிதித்த தாலிபான்கள்

ரமலான் பண்டிகையை கொண்டாட பெண்களுக்கு தடைவிதித்த தாலிபான்கள்

மாதிரி படம்

மாதிரி படம்

ஆப்கானிஸ்தானில் ரமலான் பண்டிகையை பெண்கள் கொண்டாட தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

  • Last Updated :
  • interna, Indiakabulkabulkabulkabulkabul

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து இஸ்லாமிய பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக கல்வி, வேலை, பொது இடத்திற்கு செல்லுதல் என அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. இதன் நீட்சியாக தற்போது மக்லான் மற்றும் தாக்கார் மாகாணத்தில், பெண்கள் ரமலான் பண்டிகை கொண்டாட தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

ரமலான் பண்டிகையை காரணம் காட்டி பெண்கள் கூட்டமாக வெளியே செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், தாக்கார் மாகாணத்தில் பெண்கள் குடும்பத்தினருடன் கூட உணவகத்திற்கோ, பொது இடங்களுக்கோ செல்லக்கூடாது என்று அண்மையில் தடை விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:  சூடானில் வெளிநாட்டவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்க இருதரப்பும் முடிவு

top videos

    இந்நிலையில், பெண்கள் ரமலான் பண்டிகையை கொண்டாட முதற்கட்டமாக 2 மாகாணங்களில் விதிக்கப்பட்ட தடை, நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீதான கட்டுபாட்டை கண்டித்து பல்வேறு நாடுகள் நிதியுதவி மற்றும் வர்த்தகம் செய்வதை நிறுத்தின. இதனால் அந்நாட்டில் உணவு பஞ்சம் ஒரு பக்கம் நிலவி வருகிறது. இருப்பினும் பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் தாலிபான்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

    First published:

    Tags: Afganistan, Taliban