முகப்பு /செய்தி /உலகம் / கருவை கலைத்ததால் 4 வயது மூத்த காதலியை சுட்டுக்கொன்ற காதலன்... அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்..!

கருவை கலைத்ததால் 4 வயது மூத்த காதலியை சுட்டுக்கொன்ற காதலன்... அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்..!

கைதான காதலன்

கைதான காதலன்

சிசிடிவி காட்சி ஆதாரங்களின் படி காதலன் ஹரால்டு மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

  • Last Updated :
  • int, IndiaTexasTexas

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் ஹரால்டு தாம்சன். 22 வயதான இந்த இளைஞர் தன்னை விட 4 வயது மூத்தவரான கேப்ரியல்லா கொன்சாலஸ் என்பவருடன் நீண்ட நாள்கள் காதல் உறவில் இருந்துள்ளார்.

இந்த காதல் உறவு காரணமாக ஹரால்டு மூலம் கேப்ரியல்லா கர்பமடைந்துள்ளார். இந்த கர்ப்பம் மூலம் குழந்தையை பெற்றுக்கொள்ள கேப்ரியல்லாவுக்கு விருப்பமில்லை. எனவே, கருவை கலைத்துவிடுகிறேன் என காதலனிடம் கூறிவந்துள்ளார். அதேவேளை, காதலன் ஹரால்டு கருவை கலைக்க உடன்பாடு இல்லாததால் தடுத்து வந்துள்ளார். இப்படியே, சில வாரங்கள் கடந்த நிலையில் கரு ஏற்பட்டு ஆறு வாரங்களை தாண்டியுள்ளது.

தனது காதலனுக்கு தெரியாமல் கருவை கலைத்துவிடுவோம் என்று கேப்ரியல்லா முடிவெடுத்தார். இவர்கள் வசிக்கும் டெக்சாஸ் மாகணத்தில் ஆறு வாரம் தாண்டிய கருவை கலைப்பது சட்டவிரோதமாகும். எனவே, அங்கிருந்து 800 தாண்டியுள்ள கொலாரேடோ மாகாணத்திற்கு சென்று கருவை கலைத்துள்ளார் கேப்ரியல்லா.

அதன்பின்னர் கேப்ரியல்லா ஊருக்கு திரும்பிய நிலையில், காதலன் ஹரால்டுடன் மாலுக்கு ஷாப்பிங் சென்றுள்ளார். காரில் அவர்கள் சென்றுகொண்டிருந்த போது தான் தான் கருவை கலைத்த விஷயத்தை கேப்ரியல்லா சொல்லியுள்ளார். இதை கேட்டு காதலன் ஹரால்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளார். அத்திரத்துடனே காரை ஷாப்பிங் மாலில் உள்ள பார்க்கிங் பகுதிக்கு ஓட்டி சென்ற ஹரால்டு அங்கு வைத்து காதலி கேப்ரியல்லா கழுத்தை நெரிக்க தொடங்கியுள்ளார்.

இதையும் படிங்க: அமெரிக்க அரசியலை அதிரவைத்த 0.32 செகண்ட் வீடியோ: காரணம் என்ன?

top videos

    அவரது பிடியில் இருந்து கேப்ரியல்லா தப்பியோடி நினைத்த போது, தனது துப்பாக்கியை எடுத்து காதலியை சுட்டுள்ளார் ஹரால்டு. குண்டுபாய்ந்து சரிந்து விழுந்த கார்பியல்லா அங்கே சரிந்து விழுந்து மரணமடைந்தார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, சிசிடிவி காட்சி ஆதாரங்களின் படி காதலன் ஹரால்டு மீது கொலை வழக்கு பதிவு செய்து  கைது செய்துள்ளது.

    First published:

    Tags: Crime News, Murder, Us shooting, USA