முகப்பு /செய்தி /உலகம் / ஒரே வாரத்தில் 10 சிங்கங்களை விரட்டி விரட்டி கொன்ற பொதுமக்கள்... காரணம் என்ன தெரியுமா?

ஒரே வாரத்தில் 10 சிங்கங்களை விரட்டி விரட்டி கொன்ற பொதுமக்கள்... காரணம் என்ன தெரியுமா?

காட்சிப் படம்

காட்சிப் படம்

Ten lions killed in Kenya | கென்யாவில் உலகின் வயதான சிங்கங்களில் ஒன்றான லூன்கிடோ உள்பட 10 சிங்கங்கள் கடந்த ஒரு வாரத்தில் கொல்லப்பட்டுள்ளது வன விலங்கு ஆர்வலர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

  • Last Updated :
  • international, Indiakenya kenya kenya

கென்யாவில் கால்நடைகளை கொல்லும் சிங்கங்களை பொதுமக்கள் விரட்டி விரட்டி கொன்று வருகின்றனர்.

கென்யாவில் கால்நடை வளர்ப்பவர்கள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 சிங்கங்களை அடித்துக் கொன்றுள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் கடுமையான வறட்சி நிலவுவதால், கால்நடைகள் மற்றும் வனவிலங்குகள் உரிய உணவின்றி தவித்து வருகின்றன. இதனால், வலு கொண்ட வனவிலங்குகள் கால்நடைகளை வேட்டையாடி உண்கின்றன.

தொடர்ந்து கால்நடைகள் உயிரிழப்பதால், ஆத்திரம் அடைந்த மேய்ப்பாளர்கள் வனவிலங்குகளை தாக்கத் தொடங்கினர். இதன் உச்சகட்டமாக, சிங்கங்களை மனிதர்கள் அடித்துக் கொன்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 சிங்கங்கள் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது வேதனை அளிப்பதாக கூறியுள்ள கென்யா அரசு, மக்கள்  அமைதி காக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Food, Lion, Wild Animal