முகப்பு /செய்தி /உலகம் / சிங்கப்பூரின் முதல் பிரதமருக்கு தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்

சிங்கப்பூரின் முதல் பிரதமருக்கு தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மதமோ, சாதியோ நம்மை பிளவுபடுத்தமுடியாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

  • Last Updated :
  • intern, IndiaSingaporeSingapore

சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவானுக்கு, தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள தமிழ் கலாசார அமைப்பு சாப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.

சிங்கப்பூருக்கும், தமிழ்நாட்டுக்குமான தொடர்பு ஆயிரம் ஆண்டு பழமையானது எனக் குறிப்பிட்ட அவர், சிங்கப்பூரில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ பெரியாரின் சீடர் சாரங்கபாணியே காரணம் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் முன்னணி தொழில் நிறுவன சிஇஓக்களோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

சிங்கப்பூர், வெளிநாடு போன்ற உணர்வை தரவில்லை என்றும் கூறிய முதலமைச்சர், தமிழகத்தில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டிற்கு சிங்கப்பூர் தமிழர்கள் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

top videos

    மதமோ, சாதியோ நம்மை பிளவுபடுத்தமுடியாது என்றும், தமிழ்நாட்டின் பெருமையை மீட்கும் அரசாக திமுக அரசு திகழ்கிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

    First published:

    Tags: CM MK Stalin, Singapore