SpaceX தனது ஸ்டார்ஷிப் ஏவுகணையை கடந்த வியாழன் அன்று விண்ணில் ஏவியது. ஆனால், ஏவப்பட்ட ஒரு சில நொடிகளில் அது விண்ணில் வெடித்து சிதறியது. இந்த ஸ்டார்ஷிப் ஏவுகணை சோதனையானது தோல்வியுற்றதைத் தொடர்ந்து, அது மனிதர்களை சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகம் உட்பட ஆழ்வெளிக்கு அனுப்பும் எலோன் மஸ்க்கின் இலக்கை கேள்விக்குறியாக்கி உள்ளது.
இது உலகின் மிகப்பெரிய ஏவுகணை சோதனை முயற்சி என்றும் சொல்லலாம். இது விண்வெளியை அடைந்து பூமியின் ஒரு பகுதி அளவிலான சுற்றுப்பாதையை நிறைவு செய்யும் என்று எடுத்துக் காட்டும் நோக்குடன் செலுத்தப்பட்டது. கடந்த வியாழன் அன்று காலை 8.33 மணிக்கு டெக்சாஸின் போகா சிகாவிலிருந்து ஸ்டார்ஷிப் புறப்பட்ட நான்கே நிமிடங்களில் அது வெடித்து சிதறியது.
"ஏவப்பட்ட சில நிமிடங்களில் ஏவுகணையில் இருந்து பூஸ்டர் பகுதியானது பிரிக்கப் பட வேண்டும். ஆனால், அவ்வாறு நடைபெறாததால் தான் ஏவுகணை கீழே விழ ஆரம்பித்தது. அதோடு, ஏவப்பட்ட 4 நிமிடங்களில் வெடித்து சிதறியது” என்று SpaceX அதிகாரிகள் கூறுகின்றனர். இது தவிர்த்து, இந்த அசம்பாவிதம் குறித்து அதிகாரிகள் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. சோதனை தோல்வியுற்ற ஒரு சில மணி நேரத்தில், மீண்டும் இந்த சோதனை ஒரு சில மாதங்களில் செய்யப்படும் என்று மஸ்க் ட்வீட் செய்தார்.
Read More : நிலவின் மேல்பகுதியில் விழுந்து நொறுங்கிய லேண்டர் வாகனம் ? ஐ ஸ்பேஸ் அதிர்ச்சி
நாசா விண்வெளி வீரர்கள் உட்பட மனிதர்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் போன்ற சரக்குகளை பூமியின் சுற்றுப்பாதையில் மற்றும் அதற்கு அப்பால் கொண்டு செல்வதே ஸ்டார்ஷிப்பின் திட்டமாகும். ஸ்டார்ஷிப் ஏவுகணை சுமார் 400 அடி (120-மீட்டர்) உயரம் மற்றும் 33 என்ஜின்கள் உடைய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அமைப்பாலான ஒரு ஏவுகணை ஆகும். இது முந்தைய எந்த விண்கலத்தையும் விட சக்தி வாய்ந்தது மற்றும் சந்திரனுக்கு மனிதர்களை அழைத்துச் சென்ற Saturn V ஐ விட உயரமானதாகும். இதன் செயற்கைக்கோள் செலுத்துதல் வாகன அமைப்பும் முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய வடிவமைப்பு செலவுகளைக் குறைக்கும் என்றும் உறுதியளிக்கிறது.
விண்வெளி ஆய்வு தொழில்நுட்பங்கள் நிறுவனம், தனது லைவ்ஸ்ட்ரீமில் இந்த முயற்சி இன்னும் மதிப்புமிக்கதாக இருந்திருக்கலாம் என்றும் இதில் இருந்து தாங்கள் கற்றுக் கொண்டதாகவும் பகிர்ந்து கொண்டனர். இந்த சோதனையானது கடந்த திங்கட்கிழமை (அதாவது ஏப்ரல் 17) அன்று மேற்கொள்ளப்படுவதாக இருந்தது. ஆனால், ஏவுபடுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் வால்வு தொடர்பான தொழில்நுட்ப கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டதன் காரணமாக இந்த சோதனை வியாழன் அன்று தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.